Header Ads



சம்மாந்துறைக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் (பிரத்தியேக படங்கள்)


(யு.எல்.எம். றியாஸ்)

சம்மாந்துறை பிரதேசத்தில் அண்மைக்காலமாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகின்றது. இன்று  (07.09.2013) நள்ளிரவு வேளையில் சம்மாந்துறை லேக் வீதி, சம்மாந்துறை 1ம்,2ம்,பிரிவுகளில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் பயிர்கள் போன்றவற்றையும் சேதமாக்கியுள்ளது
 

நள்ளிரவு ஊருக்குள் புகுந்த காட்டுயானை அதிகாலை வெளியேறியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர் மற்றும் அறுவடை செய்து களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் சேதமாகியுள்ளது
இந்நடவடிக்கையால்  இப்பிரதேச மக்கள் பெரும் அச்சம் அடைந்த நிலையில்
காணப்படுகின்றனர்

காட்டு யானகளின் அட்டகாசத்தில் இருந்து இப்பிரதேசத்தை பாதுகாக்க
சம்பந்த்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்
இல்லாவிட்டால் மேலும்  பல சொல்லொன்னா விளைவுகளையும் உயிர்ச்சேதங்களையும் சந்திக்க வேண்டிவரும்  என இப்பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இதேவேளை சம்மாந்துறை லேக் வீதியில் கிழக்கு மாகான சபை உறுப்பினர்
எம்.எல்.ஏ.அமீர், மற்றும் இலங்கை தென்கிழக்கு பல்கலை கழக உபவேந்தர்
கலாநிதி எஸ்,எம்,எம்,இஸ்மாயில் ஆகியோரது வசிப்பிடமும் இவ்வீதியிலேயே உள்ளது என்பது குறிப்படத்தக்கது  .






No comments

Powered by Blogger.