Header Ads



இஸ்ரேலின் ஆதிக்கமும், இலங்கை இனவாதிகளின் சூழ்சிகளும்.

Ash Sheikh M Z M Shafeek (UK) 

இஸ்ரேலின் ஆதிக்கமும் இனவாதிகளின் சூழ்சிகளும். இஸ்ரேலைப் போற்றி, இஸ்ரேலின் அநியாயங்களை மறைக்க முயற்சித்து கட்டுரை எழுதிய இலங்கையைச் சேர்ந்த டைமன் டயஸ் என்பவன் இஸ்ரேலை ஆதரிக்கிறான் என்பதை விட பாலஸ்தீனத்திற்கும்  இஸ்லாமிய உலகிற்கும் எதிராக யூத நாசகாரர்களால் தூண்டி விடப் பட்ட ஒரு கிருமியாக இருக்கிறான் என்பதே சரியான கூற்றாகும். இவனுக்கும் இலங்கை அரசுக்கும், இவனுக்கும் பொது பல  சேனாவுக்கும், இவனுக்கும் இலங்கையில் இயங்கும் இஸ்ரேலிய தூதரகத்திற்கும்  மிக நெருங்கிய உறவுகள் இருக்கலாம். 

அரசியல், பொருளாதார நடவடிக்கைகளில் என்றும் இல்லாத அளவு தற்போது இரண்டு வருட காலத்திற்குள்  இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் நெருக்கம் ஏற்பட்டு இருக்கிறது. பாலஸ்தீனின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுகின்ற இலங்கைக் குழுவின் தலைவர்  என தன்னை வெளி உலகிற்கு காட்டிக் கொண்டு இஸ்ரேலுடன் மிகவும் நெருங்கி விட்டார்  ஜனாதிபதி மகிந்த.இலங்கைக்குள்  இஸ்ரேலின்  ஊடுருவல் வேகமான பின்பு தான் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான  சகல பிரச்சினைகளும் ஆரம்பமாயின. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச செய்தது போல் உலக முஸ்லிம்களின் சாபக் கேடான இஸ்ரேலிய கபோதிக் கூட்டத்தை இலங்கையிலிருந்து முழுமையாக விரட்டியடிக்க வேண்டும்.பிரேமதாசவின் அந் நற்காரியத்தால் தான் இலங்கை முஸ்லிம்கள் 2012 வரை நிம்மதியாக வாழ முடிந்தது.அதே வேலை  இஸ்ரேலில் வேலை வாய்பைப்  பெற்று அண்மையில் இலங்கையில் இருந்து முதற் தடவையாக பலநூறு பேர்கள்   இஸ்ரேல் சென்றனர். அவர்கள் அனைவரும் பௌத்த வாலிபர்கள். அவர்கள் திரும்பி வரும் போது  கடுமையான மூளைச் சலவை செய்யப் பட்ட நிலையிலேயே  நாடு திரும்புவார்கள்  என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. 

அப்போது இன்னும்  அதிகமான தீவிரப்  போக்குக் கொண்ட பல சேனாக்கள் இலங்கையில் உருவாகலாம். கவலை என்னவெனில் வெளிப்படையாக கண்ணுக்குத் தென்படுகின்ற சில பள்ளிவாசல் உடைப்புகளையும், இஸ்லாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களையும், கூட்டங்களையும் கருத்திற் கொண்டே இலங்கையிலும், இலங்கைக்கு வெளியேயும் வாழுகின்ற எமது இலங்கை முஸ்லிம் சகோதரர்கள் இலங்கை இனவாதத்தை எடை போடப் பழகி விட்டனர். இனவாத, இஸ்லாமிய எதிர்ப்பு வாத சக்திகளின் இன்றைய நிலை, அவர்களின் அண்மைய கால வழர்ச்சி, உள் நாட்டு வெளிநாட்டு சக்திகளுடன் இவர்கள் வளர்த்து   வருகின்ற உறவு, பொருளாதார வளர்ச்சி, கிராமிய நகர பகுதிகளில் வாழ்ந்து வரும் பௌத்தர்களிடம்  இவர்களுக்கு இருக்கின்ற செல்வாக்கு, நாட்டின் உயர்மட்ட தேரர்களால் ஏற்படுத்தப் பட்டுள்ள  03 வகையான பௌத்த உயர் சபைகளிலும்  இவர்களுக்கு  இருக்கின்ற செல்வாக்கு என இன்னோரன்ன விடயங்களில் இவர்களின் வளர்ச்சி இன்றைய அளவில் எவ்வாறு இருக்கிறது என்று எதையும் தேடித் பார்க்காது பிரச்சினை குறைந்து விட்டது. 

இப்போதைக்கு நாடு அமைதி, இனவாதிகள் அடங்கி விட்டனர் என்றே 95% இலங்கை முஸ்லிம்கள் ( வெறும் வெளிப் படை நிகழ்வுகளைக் கருத்திற் கொண்டு) சிந்திக்கப் பழகி இருக்கிறார்கள். மகியங்கனைப் பள்ளிவாசல் உடைப்பின் போது பொங்கியெழுந்த முஸ்லிம் சமூகம் இரண்டு வாரங்களில் அதை மறந்து விட்டது. அண்மையில் காலியில் நடைபெற்ற பொது பல சேனாவின் கூட்டத்திற்கு வருகை  தந்திருந்த ஞான சார தேரரின் ஆற்கள் சுமார் 40 உயர்ரக வாகனங்களில் வந்திறங்கினர். அதில் ஒவ்வொரு வாகனமும் ஒரு கோடிக்கு மேல் அல்லது  75 லட்சம் அளவு பொருமதிவாய்ந்தவை  என்ற செய்தி கேட்டபோது    இக்குறுகிய ஒன்றரை வருட கால வரலாறு கொண்ட இவர்கள் அடைந்துள்ள பொருளாதார பலத்தை கோடிட்டுக் காண்பித்தது. ஆகவே இது போன்ற எதையுமே கணக்கில் எடுக்காத எம் சமூகம்   திரும்பவும் கிறேன்பாஸ் பள்ளிவாயல் உடைப்பின் போது கொதித்தெழுந்து வழமையை விட சற்று அதிகமாகவே உணர்ச்சிவசப் பட்டு  இரண்டே வாரங்களில் அதையும் மறந்தே போய்  விட்டது. 

இந்த இரண்டு சம்பவங்களின் போதும் இனவாதிகளுக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்துவோம், மறியல் போராட்டம் செய்வோம் என்றெல்லாம் வீராப்பு  பேசிய பலர் 15 தே  நாற்களில் இருந்து இன்று வரை  இப்போது பிரச்சினை முடிந்து விட்டது. இனவாதிகள் அடங்கி விட்டார்கள் போன்ற கருத்துக்களை கூறி வருகிறார்கள். நாம் இங்கு வெளிநாடுகளில் இருந்து இலங்கை முஸ்லிம் சகோதர்களுடன் தொடர்பு கொண்டு தற்போது நிலைமை எப்படியென வினவினால் 95 வீதமானவர்களிடமிருந்து  மாஷா அல்லாஹ் Chapter Closed என்பது போன்ற பதில்களே கிடைக்கின்றன. இன்னும் சில நாற்களில் ஹலாலை மீண்டும் பூதாகரமாக்குவதற்கான முயற்சிகள் வேகமாக நடை பெற்று  வருகின்றன. அப்போது இல்லை திரும்பவும் Chapter ரை  open பண்ணி விட்டானுங்க என்று அங்கலாய்ந்து கொண்டு ஜம் இய்யத்துல் உலமாவை திட்டித் தீர்பார்கள். தூர நோக்கோடு சற்று அலசி சிந்திக்கின்ற போக்கு எம் சமூகத்திடம் இல்லாமல் இருப்பது பலத்த நஷ்டமாகும். 

சரி அல்லாஹ்வின் பக்கம் கவனத்தைத் திருப்பி, செய்த பாவங்களை  விட்டு, தவ்பா செய்து அவனது உதவிகளைப் பெற்றுக் கொள்ளலாமே என்று பார்த்தால் அதைச் செய்வதற்கும் பெரும்பாலானோர் தயாராக  இல்லை.முதன் முதலாக  அல்லாஹ்வின் உதவியைப் பெறுவதற்கான சகல  வழிகளையும்  தேடிக் கொள்வதுடன்  எமது சகல நடவடிக்கைகளையும் அவ்வப்போது நிகழும் அசம்பாவிதங்களால் உந்தப் பட்டு  வெறும் உணர்சிகளுக்கு அடிமைப் படுகின்றவர்களாக இன்றி நுணுக்கமும், தூர நோக்குடன் கூடிய  புத்திசாலித் தனமான தீர்வுகளையும் எட்டுகின்ற ஒரு சமூகமாக எம்மை அல்லாஹ் மாற்றியருள்வானாக.

1 comment:

  1. அருமையான கட்டுரை, அன்பர் சொன்னது போல வெளிநாட்டில் உள்ள முஸ்லிம்கள், நாட்டில் உள்ளவர்களிடம் BBS பற்றிய பிரச்சினைகளைக் கேட்டால், பலர் ஓ அப்படியா? என்று எங்களிடமே திருப்பிக் கேட்பார்கள், ஏதோ பத்தோடு பதின்னொன்று தான்,தான் குடும்பம் அவ்வளவு தான், படித்தவர்களிடம் கேட்டால் வேறொரு வரைவிக்கணம், அரசியல்வாதிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம் நீயா நானா என்று பதவிக்கான போட்டி, அல்லாஹ்தான் நாம் அனைவரையும் காப்பாற்ற வேண்டும்

    ReplyDelete

Powered by Blogger.