Header Ads



றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்கான வீட்டின் நிர்மாணப் பணி பூர்த்தியடைகிறது

மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக அமைக்கப்பட்டு  வரும் வீட்டின் நிர்மாணப் பணிகளைப் பார்வையிடுவதற்காக, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரி.என்.எல்.கருணாரத்ன, வர்த்தகப் பொருளாதாரத்துறைத் தலைவர்  கலாநிதி அநுர மார உதுமான்கே, கேணல் விகும் லியனகே உள்ளிட்ட பலர் மூதூரிற்கு விஜயம் செய்திருந்தனர்.

இந்த வீட்டின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடையும் நிலையை எட்டியுள்ளன. மிகவும் வறுமையில் வாழும் றிஸானா நபீக்கின்  குடும்பத்தினருக்கு வீடொன்றை அமைத்துக் கொடுப்பதாக பலர் வாக்குறுதியளித்தனர்.

எனினும் அவர்களில் எவரும் முன்வராத நிலையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகத்தினரும் இலங்கை இராணுவத்தினரும் இணைந்து வீடொன்றை அமைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Lh



1 comment:

  1. இந்த பல்கலைக்கழக சமூகத்தினரும் இலங்கை இரானுவத்தினரும் முஸ்லிமல்லதா சகோதரர்களாக இருப்பதற்கு பெரும்பாலும் அதிக சாத்தியமுண்டு.இந்த கருனை உணர்வுதான் கரையோர இஸ்லாமிய சகோதரர்களுக்கு மத்தியில் இருந்திருக்குமானால் றிஸானா வெளினாட்டுக்கே சென்றிருக்கும் தேவை வந்திருக்காது. றிஸானா வெளினாடு சென்ற நோக்கத்தில் பெரும் பங்கானது தனது வாழ்வுக்கு ஒரு வீடு கட்டனும் அப்போதுதான் அந்த சீதன வெறிகொண்ட அந்த கரையோ இஸ்லாமியர்கள் எவராவது தன்னை மணமுடிக்க முன்வருவார்கள் என்பது. றிஸானாவின் சகோதரரிக்கு மணமுடிக்க தயவுசெய்து அந்த கரையோ சீதன அடிமைத்தனம் கொண்ட எந்த மகனையும் மணமகனாக எடுக்க வேண்டாமென றிஸானாவின் பெற்றோரை கேட்கிறோம். எம்மவர் கதை பேச்சுக்கு மட்டுமே, வாய் இல்லை என்றால் காக்கா தூக்கிக்கு போகும் என்பது ஒரு பலமொழி.

    ReplyDelete

Powered by Blogger.