Header Ads



நாட்டில் ஆட்சி மாற்றம் ஆரம்பிக்கப் போகின்றது - ஆசாத் சாலி

(அஸ-ஸாதிக்)

கண்டி முஸ்லிம்கள் ஊருக்கு இரு வாக்குகளையும் உரிமைக்கு ஒரு வாக்கையும் அளித்து ஐக்கிய தேசிய கட்சியைப் பலப்படுத்த வேண்டும் என்று மத்திய மாகாண சபை கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஆசாத் சாலி குறிப்பிட்டார்.

மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு உடுநுவர அம்தரவல்லை சந்தியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், 

இந்நாட்டில் ஆட்சி மாற்றம் மத்திய மாகாணத்தில் இருந்து ஆரம்பிக்கப் போகின்றது. மத்திய மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். அரசாங்கம் மத்திய மாகாணத்தில் தோல்வியடைவது நிச்சயமாகும். இத்தோல்வி ஆட்சியாளர்களுக்கு பலத்த அடியாக அமையும்.

மத்திய மாகாணத்தில் சகல இன மக்களும் வாழ்கின்றனர். எனவே இன , மத பேதம் இன்றி சகலரையும் அரவணைத்துச் செல்லும் ஐக்கிய தேசிய கட்சியை கண்டி வாழ் மக்கள் ஆதரித்து வருகின்றனர். ஆளும் கட்சியின் மாகாண சபைத் தேர்தல் மூலம் அரசாங்கத்தை  மாற்ற முடியாது என்று பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் மாகாண சபை ஆட்சியை மட்டுமன்றி அரசாங்கத்தை மாற்றவும் மாகாண சபைத் தேர்தல் வழி செய்யும்.

இதற்கு கடந்த கால நிகழ்வுகள் ஆதாரமாயுள்ளன.  இலங்கையில் தேசிய அரசியலில் மாற்றத்தை மாகாண  சபைத் தேர்தல் மூலம் ஆரம்பித்து வைத்த வரலாறு உள்ளது. எனவே ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிப்பதன் மூலம் அரசாங்கத்திற்கு முஸ்லிம்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஆரம்பித்து வைப்போம்.

இந்நாட்டில் இதற்கு முன்பு முஸ்லிம்களின் பள்ளிவாசலை உடைக்கும் அக்கிரமம் ஒருபோதும் நடைபெறவில்லை. இலங்கை சுதந்திரம் கிடைத்த பின்பு  இதுபோன்ற பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் கொண்ட காலம்  இதுவரை ஏற்படவில்லை. ஆனால் முஸ்லிம்களின் பிரச்சினைகள் நெருக்கடிகள் தொடர்பாக முஸ்லிம்களின்  எந்தவொரு தலைமைத்துவமும் தட்டிக் கேட்பதில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகளை பெற்றுக்கொண்டு அரசாங்கத்துடன் இருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதற்கு விதிவிலக்கல்ல.

அரசாங்கம் எம்மை உடம்பை பிடித்து வெளியே தள்ளினாலும் அரசாங்கத்தை விட்டு வெளியே வர மாட்டோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றது. மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு பாடம் படிப்பிக்க முடியும். இந்நாட்டில் ஆட்சியாளர்களுக்கு  சிறுபான்மை மக்களின் வாக்குகள் அவசியம் என்பதை உணர்த்த வேண்டும். இதற்குரிய சிறந்த வாய்ப்பு இம்மாகாண சபைத் தேர்தல் ஆகும். 

3 comments:

  1. வாழ்த்துக்கள். ஆட்சி மாறவேண்டும் என்பதுதான் எப்போதிருந்தே மக்கள் சொல்லிக்கொண்டு வருகின்றார்கள். ஆனால் எதிர்க்கட்சியின் பலவீனத்தால்தான் இன்னும் ஆட்சியில் மாற்றம் ஏற்படாமை.

    ReplyDelete
  2. அய்யா வணக்கம்....

    உங்க சொந்த கட்ச்சிக்கு விழம்பரம் முடிந்து தற்போது UNP க்கு விழம்பரம் செய்யும் ஆளாகிவிட்டீர்கள். தனது ஆடையையும் பச்சயாக்கிட்டார் இந்த மனிசன்.

    100000000000000% நிட்சயம் UNP க்கு அதிர்ச்சித்தோல்வி காத்திருக்கின்றது இம்முறையும். 21 இன் பின் இவர் ரணிலுக்கு எசாட்டி பாருங்கோ மக்காள்....

    இவரின் தொழிலே கட்சி மாறுவதும், மாறுகின்ற கட்சியில் தலைவர் பதவிக்கு ஆசைப்படுவதும்.

    கண்டியில் பேசும் போது, கண்டியில் இருந்துதான் ஆட்சி மாற்றம் ஆரம்பம்,,, யாழில் பேசும்போது யாழில் இருந்துதான் ஆட்சி மாற்றம்.... இது நீக்க ஏங்கி நிற்கும் வாக்கும் பிச்சைக்கான பேச்சு....

    மக்கள் உங்கள நல்லா புரிஞ்சிருக்கனும் இந்த நேரம்.....

    மக்கள் கூட்டத்தை வைத்து உங்க வாக்கு எண்டு நீங்க தப்புக்கணக்கு போடவேண்டாம் அய்யா.

    ReplyDelete
  3. நாட்டின் அரசு பாரிய தவறுகளில் ஈடுபடுவது தெளிவாக தெரிந்து இருக்கின்ற பொழுதும் அந்த அரசை வீழ்த்தி சாதனை புரியக்கூடிய எதிர்க்கட்சி இலங்கையில் இல்லை என்பது தான் கவலைக்குரிய விடயம். அதைவிட கவலையானது அசாத் சாலியின் அரசியல். ஒரு யுகப்புரட்சி செய்த அஷ்ரப் அவர்களின் வீரம் நிறைந்த பேச்சு, அரசியல் சாணக்கியம் இவைகளை விட பொறுமையான காத்திருப்பு இவைகள் எதுவும் அவரிடம் இல்லை. ஒரு தேர்தல் தோல்வியுடன் அடுத்த கட்சியின் கதவு திறக்குமா என்று பார்க்கும் இவரால் சாதிக்க முடியுமா என்று தெரியவில்லை. எனினும் வெற்றி பெற்றால் கட்சி மாறாது சேவைகள் செய்தால் நன்றே..

    ReplyDelete

Powered by Blogger.