தேர்தலில் எதிர்கட்சி வெற்றி பெறாமை அரசாங்கத்தின் தவறு அல்ல - மஹிந்த
ஜனநாயகத்திற்கு மதிப்பளித்து நடாத்தும் தேர்தலில் எதிர்கட்சி வெற்றி பெறாமையானது அரசாங்கத்தின் தவறு அல்லவென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொத்மலை பூண்டுலோயாவில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். நாடு ஜனநாயகத்தில் இருந்து வெளியேறுவதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிகாரத்தில் இருந்த போது மக்களுக்கு சேவையாற்ற தவறிய எதிர்கட்சி தற்சமயம் நாட்டிற்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் இதன் போது அவர் குற்றம் சுமத்தினார
எதிர்க்கட்சி என்பது ஐ.தே.கட்சியை மாத்திரம் குறிக்காது. அரசின் பக்கம் சாயாத அனைத்துக் கட்சிகளையும், அமைப்புக்களையும் குறிக்கும்.
ReplyDeleteஇந்த வகையில் கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்ட நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு இறுதி ஆசனம் கிடைக்க இருந்தது.
எனினும் உங்கள் கட்சிக்கு 4000 வாக்குகளைக் கள்ளத்தனமாகச் சேர்த்துக் கொண்டதனால் அந்த இயக்கத்திற்குரிய ஆசனம் கிடைக்கவில்லை.
அத்துடன் இந்த கள்ள வாக்குக் கணக்கு இடம்பெறாமல் இருந்திருந்தால் மாகாண மட்டத்தில் த.தே. கூட்டமைப்புக்கே அதிக உறுப்பினர்களும், 2 போனஸ் ஆசனங்களும் கிடைத்திருக்கும்.
இதிலிருந்து அரசாங்கம் எதிர்கட்சிகளை தேர்தல்களில் வெல்வதற்கு இடமளிப்பதில்லை என்பதே எனது உறுதியான நம்பிக்கையாகும்.
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-
There is no democracy in Sri Lankan only MR & Co running the show.
ReplyDelete