Header Ads



ஆரோக்கியமான உடல் அவசியமா..? அடிக்கடி தண்ணீர் பருகுங்கள்..!

உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் உடலானது நன்கு செயல்படுவதற்கு தேவையான சக்தியானது இல்லாமல் சோர்வுடன் இருக்கும்.  இவ்வாறு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது அதனால் அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். சிலருக்கு உடல் வறட்சி  அதிகமாகி, தாகத்தையும் தாண்டி அதிகப்படியான பசியானது ஏற்படும். இவ்வாறு அடிக்கடி பசி உணர்வு ஏற்பட்டால் அது உணவு உண்பதற்கான  அறிகுறி அல்ல. 

மாறாக அது உடலில் வறட்சி உள்ளது என்பதை சொல்லாமல் சொல்கிறது. ஆகவே இந்நேரத்தில் தண்ணீரை அதிகம் பருக வேண்டும். உடலில் உள்ள  மிகப்பெரிய உறுப்பு தான் சருமம். இந்த சருமத்திற்கு அதிகப்படியான தண்ணீரானது மிகவும் அவசியம். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சி  அல்லது செதில் செதிலான சருமத்தை ஏற்படுத்தி தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று அறிகுறி காட்டும். உடலின் வியர்வையானது தண்ணீரால்  உருவானது. 

ஆனால் உடலில் போதிய தண்ணீர் இல்லாவிட்டால் வியர்வையானது வற்றிவிடும். இதனால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேற்றப்படுவது  தடைபட்டு சருமத்தை மட்டுமின்றி உடலையும் ஆரோக்கியமற்றதாக்கிவிடும். உடலில் வறட்சி இருந்தால் தலைவலியுடன் மயக்கமும் உருவாகும்.  எனவே தேவையில்லாமல் இத்தகைய உணர்வுகள் ஏற்பட்டால் தண்ணீரை அதிகம் பருக ஆரம்பியுங்கள். 

70 சதவிகிதம் தண்ணீரால் ஆன தசைகளில் தண்ணீர் குறைவாக இருந்தால் தசைப்பிடிப்பு, தசை வலிகள் போன்றவை உடற்பயிற்சி செய்யும் போதோ  அல்லது செய்த பின்னரோ ஏற்படும். இதயம் கூட தண்ணீரால் ஆனது தான். இத்தகைய இதயத்திற்கு போதிய நீரானது இரத்த ஓட்டத்தின் மூலம்  கிடைக்கும். ஆனால் இரத்தத்திற்கே போதிய தண்ணீரானது கிடைக்காவிட்டால், இதயத்திற்கு செல்ல வேண்டிய இரத்தத்தின் அளவும் குறைந்து  அடிக்கடி படபடப்பை ஏற்படுத்திவிடும். 

எனவே அடிக்கடி இதய படபடப்பு ஏற்படுமாயின் உடலில் போதிய நீர் இல்லை என்று அர்த்தம். உடலில் நீர் வறட்சி இருந்தால் சருமத்தின் நெகிழ்வுத்  தன்மையானது குறைந்துவிடும். மேலும் இதனால் சருமம் முதுமை தோற்றத்தை அடைந்தவாறு வெளிப்படுத்தும். ஆகவே இந்த மாதிரியான நேரத்தில்  தண்ணீரை அதிகம் பருக வேண்டும். மலச்சிக்கல் ஏற்படுவதும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்பதற்கான அறிகுறியே. 

ஏனெனில் உடலில் போதிய நீர் இல்லாவிட்டால் குடலானது செரிமானமடைந்த உணவை எளிதாக வெளியேற்ற முடியாமல் மலத்தை  இறுக்கமடையச் செய்துவிடும். உடலின் வெப்பநிலையானது போதிய அளவில் இல்லாமல் அதிகப்படியான வெப்பத்துடன் இருந்தால் அது உடலில்  போதிய தண்ணீர் இல்லாததற்கான அறிகுறிகளில் ஒன்றாகும். ஆகவே உடலானது அதிகப்படியான வெப்பத்தில் இருந்தால் தண்ணீர் அதிகம்  பருகினால் சரியாகிவிடும். உடலில் நீர் வறட்சி இருந்தால் ஒற்றை தலைவலி ஏற்படும். எனவே அடிக்கடி ஒற்றை தலைவலி வந்தால் தண்ணீர்  அதிகம் பருகுங்கள்.

1 comment:

  1. Drinking with left hand ? Saithan also will be drinking with...

    ReplyDelete

Powered by Blogger.