Header Ads



ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை என சிரியா ஆதாரம் காட்ட வேண்டும் - அமெரிக்க நிபந்தனை

"ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை, என்பதற்கான ஆதாரங்களை காட்டினால், சிரியா நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்கலாம்' என, அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சிரியா ராணுவம், கடந்த, 21ம் தேதி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதில், 1,300 பேர் கொல்லப்பட்டனர். ரசாயன குண்டு வீச்சில், நச்சு புகை பரவி, 1,300 பேர் கொல்லப்பட்டதாக கூறும் இடத்தை, ஐ.நா., பார்வையாளர்கள் ஆய்வு செய்து, தடயங்களை சேகரித்துள்ளனர். இன்னும் இது தொடர்பான அறிக்கை வெளியிடப்படவில்லை.

சர்வதேச விதிகளை மீறி, ரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிரியா மீது, ராணுவ தாக்குதலை நடத்த, அமெரிக்கா திட்டமிட்டு உள்ளது. "சிரியா மீது நடத்தப்படும் தாக்குதல், 60 நாட்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். அமெரிக்க வீரர்களின் காலடி அந்நாட்டில் படக்கூடாது' என, அமெரிக்க செனட் குழு தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டு உள்ளது. ரஷ்யாவில் நடந்த, "ஜி 20' உச்சி மாநாட்டில், ""சிரியா மீதான தாக்குதல் தவிர்க்க முடியாது,'' என, ஒபாமா திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார். இதையடுத்து, சிரியா மீது, 72 மணி நேர தாக்குதலை நடத்த, அமெரிக்க தலைமையகமான, "பெண்டகன்' திட்டமிட்டு உள்ளது.

சிரியா மீதான தாக்குதலால், அணு ஆயுதங்கள் பயன்படுத்தக்கூடிய அபாயம் உள்ளதாக, ரஷ்யா, பன்னாட்டு அணுசக்தி முகமையக கூட்டத்தில், நேற்று தெரிவித்தது.

இதற்கிடையே, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி குறிப்பிடுகையில், ""சிரியா தன்னிடம் ரசாயன ஆயுதங்கள் இல்லை; அதை பயன்படுத்தவில்லை, என்பதற்கான ஆதாரங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் பட்சத்தில், அந்நாட்டின் மீதான தாக்குதலை தவிர்க்க முடியும்,'' என்றார்.

2 comments:

  1. பயம் என்றல் பயம் என்று சொல்ல வேண்டும், புசுசா ஆதாரம் கேட்கிறது. ஏன் ஆப்கான்ஷிதன் இடம் ஆதாரம் கேட்கவில்லை.

    ReplyDelete
  2. இல்ல தம்பி நீ சிரியாமீது தாக்குதலை ஆரம்பி அவங்க காட்ட மாட்டாங்க. நீ வேறு எதையாவது சொல்லி மழுப்பாதடா சுண்டெலி.

    ReplyDelete

Powered by Blogger.