புத்தளத்தில் மீண்டும் தேர்தல் நடத்தத் தேவையில்லை என நீதிமன்றத்தில் தெரிவிப்போம் - மஹிந்த தேசப்பிரிய
(Tn) புத்தளம் மாவட்டத்தில் மீண்டும் தேர்தல் நடத்தத் தேவையில்லை. கணக்கிடப்பட்டு கட்டுக்களாக கட்டப்பட்ட வாக்குச்சீட்டுகளே கண்டுபிடிக்கப்பட்டன. அதனால் தேர்தல் முடிவுகளிலோ விருப்பு வாக்கிலோ, எதுவித மாற்றமும் ஏற்படாது என தேர்தல்கள்ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தலை மீண்டும் நடத்தும் அதிகாரம் தனக்குக் கிடையாது எனவும் நீதிமன்ற உத்தரவினால் மட்டுமே மீண்டும் தேர்தல் நடத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். புத்தளம் வாக்கு எண்ணும் நிலையமொன்றிலிருந்து வாக்குச்சீட்டுகள் கொண்ட பொதிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு தேர்தல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த தேர்தல் ஆணையாளர், தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகளின் கவனயீனத்தினால் தான் இந்தத் தவறு ஏற்பட்டது. இருந்தாலும் இது மன்னிக்க முடியாத பாரதூரமான குற்றமாகும். இந்த சம்பவத்தினூடாக தேர்தல் திணைக்களத்திற்கு ஏற்பட்ட அபகீர்த்தி குறித்து கவலை அடைவதாக குறிப்பிட்டார்.
தனது அறிவுறுத்தல்களை முழுமையாக பின்பற்றாததாலே இவ்வாறு தவறு நிகழ்ந்ததாக குறிப்பிட்ட அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார். பாடசாலையில் இருந்து மீட்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் ‘சீல்’ வைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட் டுள்ளதோடு அவை நேற்று புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
இந்த விவகாரம் குறித்து தான் நேரில் சென்று நிலைமைகளை ஆராய்ந்ததாக கூறிய தேர்தல் ஆணையாளர் இது தொடர்பாக மேலும் கூறியதாவது, முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் ஹஸன் அலியிடமிருந்து கிடைத்த தொலைபேசி அழைப்பின் மூலம் வாக்குச்சீட்டு விவகாரம் குறித்து தெரிய வந்தது.
அதன்படி, நானும், மேலதிக தேர்தல் ஆணையாளர், பிரதி தேர்தல் ஆணையாளர் மொஹமட் அடங்கலான 15 பேரடங்கிய குழு புத்தளம் சென்றோம். வாக்குப் பெட்டிகளில் இருந்து எடுத்து கணக்கிடப்படும் வாக்குச் சீட்டுகள் பின்னர் 50 வாக்குச்சீட்டுகள் கொண்ட கட்டுகளாக கட்டி மூட்டைகளில் இடப்படும். தேர்தல் கணக்கெடுப்புகள் முடிந்த பின்னர் அவை வாக்கு எண்ணும் நிலையங்களிலிருந்து அகற்றப்படும்.
ஆனால், தேர்தல் அதிகாரிகளின் கவனயீனத்தினால் அவ்வாறான 3 பொதிகள் தவறுதலாக விட்டுச் செல்லப்பட்டுள்ளது. நாம் செல்கையில் அவை மேசை மேல் கொட்டி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுடன் வாக்குகள் எண்ணப்பட்டது தொடர்பான சுருக்க விபரப் பட்டியல்களும் காணப்பட்டன. வாக்கு எண்ணுகையில் எதுவித தவறும் இடம்பெறவில்லை. அது குறித்து எந்த முறைப்பாடும் கிடைக்கவில்லை.
இந்த சம்பவத்தின் மூலம் தேர்தல் திணைக்களம் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனை மீளக் கட்டியெழுப்ப காலம் பிடிக்கும். தேர்தலில் தோல்வியடைந்தவர்களே வாக்கு எண்ணுகையில் மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டுகின்றனர். எல்லா வேட்பாளர்களும் தாமே வென்றதாக நினைக்கின்றனர். மீண்டும் தேர்தல் நடத்துமாறு கோரி யாராவது வழக்குத் தாக்கல் செய்தால் அது தொடர்பில் தேர்தல் திணைக்கள நிலைப்பாட்டை நீதிமன்றத்துக்கு முன்வைப்போம்.
மீண்டும் தேர்தல் நடத்தத் தேவையில்லை என்பது தொடர்பில் நாம் எமது விளக்கத்தை தெரிவிப்போம். இச் சம்பவம் தேர்தல் அதிகாரம் தொடர்பான மக்களின் நம்பிக்கையை மீறுவதாகும். தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் இரு முறைப்பாடுகள் கிடைத்தன. இராணுவ தளங்களில் தபால் மூல வாக்களிப்பின் போது முறைகேடுகள் இடம்பெறவில்லை என்றார். இந்த ஊடக மாநாட்டில் மேலதிக தேர்தல் ஆணையாளர் ரத்னாயக்க, பிரதி தேர்தல் ஆணையாளர் மொஹமட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

தேர்தல் ஆணையாளரின் இந்த விளக்கம் நியாயமாகவே தோன்றுகிறது. எண்ணப்பட்ட வாக்குகள்தான் வெளியில் கண்டெடுக்கப்பட்டவை என்றால் தேர்தல் முடிவுகளில் மாற்றம் ஏற்பட வழியில்லை. நானும் பல தேர்தல்களில் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கட்சிகளின் முகவராகச் சென்றுள்ளேன். அதனடிப்படையில்தான் தேர்தல் ஆணையாளரின் இந்த விளக்கத்தைச் சரி காணகிறேன்.
ReplyDeleteவாக்குப் பெட்டியில் இருந்து வாக்குச் சீட்டுக்கள் வெளியில் கண்டெடுக்கப்பட்டிருக்குமாயின் அதைத்தான் முறைகேடு எனச் சொல்லலாம். இந்த விடம் தொடர்பில் எனது முன்னைய கருத்துக்களை நான் வாபஸ் பெற்றுக் கொள்கின்றேன்
-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-