கல்வி உரிமையும், கடுமையான தண்டணையும்
(மனித உரிமைகள் அதிகாரி அப்துல் அஸீஸ்)
எமது நாட்டில் ஒவ்வொருவரும் கல்விபெற உரிமை உண்டு. தொடக்க நிலையிலேனும் எல்லோருக்கும் கல்வி இலவசமாகக் கிடைக்க வேண்டும். மனித உரிமைகள் விடயங்களைக் கண்டறியவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் கல்வி அடிப்படைத் தேவையாகவுள்ளது.
கல்வி கற்கின்ற பிள்ளைகளுக்கு பாதுகாப்பிற்கான உரிமை உண்டு. உடல் ரீதியான அல்லது உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் தீங்குகளிலிருந்தும் பிள்ளையை பாதுகாப்பதற்கு பொருத்தமான சட்டவாக்க, நிருவாக, சமூக மற்றும் கல்வி நடவடிக்கைகளை அரச தரப்பினர் எடுக்க வேண்டுமென சிறுவர் சமயாத்தின் ஒன்பதாவது உறுப்புரை கூறுகிறது.
இதனடிப்படையிலேயே எமது நாட்டில் சிறுவர் தொடர்பான வலுவான சட்டங்கள் உள்ளது. சட்டம் ஒரு சமுகத்தின் அமைதியையும், நீதியையும் நிலைநாட்ட அடிப்படையாக அமைகின்றது. குறிப்பாக வௌ;வேறு சட்டங்கள் தனித்தனி நோக்கங்களைக் குறிக்கோளாக கொண்டிருக்கிறது. சிறுவர் தொடர்பிலான குற்றவியல் குற்றங்கள் ஒரு தனி நபருக்கெதிரான தனிப்பட்ட குற்றங்களாகக் கருதப்படாமல் முழு சமுகத்திற்கும் எதிரான குற்றங்களாகவே அனைவராலும் நோக்கப்படுகிறது.
ஒரு அரச உத்தியோகத்தரை சிறுவர் துஸ்பிரயோகத்தில் குற்றம் சாட்டுகின்ற போது நியாயமான சந்தேகம் இருப்பதுடன், அது நிருபிக்கப்பட வேண்டும். இவ்வாறு நிருபிப்பதற்கு சான்றுகள், சாட்சிகள் அவசியம். குறித்த குற்றம் நீதிமன்றத்தினால் நிருபிக்கப்படும்வரை அவர் சந்தேக நபராகவே கருதப்படுவார்.
இன்று அனேகமான சிறுவர்கள் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்படைந்த நிலையில் இருக்கின்றனர். காரணம் வீட்டுச் சூழலில் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களும், குறிப்பாக பாதுகாப்பும், அன்பும், அரவணைப்பும் வழங்க வேண்டிய பெற்றார்களின் கண்காணிப்பிலிருந்து தூரமாவதையும் குறிக்கலாம்.
சம்பவக் கற்கை
பின்தங்கிய கிராமம் ஒன்றில்; திருமணமான ஒரு தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள். இப்பிள்ளைகளில் 15 வயது பெண் பிள்ளையும்; 3 வயது ஆண் மகனும் இருந்தனர். தந்தை மதுபானத்திற்கு அடிமையானவர். அவர் தினசரி உழைத்தாலும் அவரின் சம்பளத்தில் அரைப் பங்கு குடிப்பதற்கே செலவானது. இந்நிலையில் வீட்டில் பொருளாதார பிரச்சினை தலைதூக்கியது. வேறு வழியில்லாமல் தாய் பிள்ளைகளை அம்மம்மாவிடம் ஒப்படைத்து விட்டு மத்திய கிழக்கிற்கு வேலைவாய்ப்பிற்காக சென்றாள்.
தந்தை தினமும் மதுபோதையில் வீட்டில் பி;ள்ளைக்கு அடித்து சித்திரவதை செய்து வந்தார். அத்துடன் பெண் பிள்ளைக்கு பாலியல் சேட்டையும்;; செய்து வந்தார். பாதிப்புற்ற சிறுமியை பாடசாலைக்கு செல்ல விடாது இடையில் வீட்டு வேலைக்காக பயன்படுத்தினார். சிறு பிள்ளை நோய்வாய்ப்;பட்ட போது, உரிய மருத்துவ சிகிச்சையும்;; செய்யாமல் அலட்சியமாக இருந்தார். இதனை தாங்க முடியாமல் பெண் பிள்ளை அம்மம்மாவிடம் கூறிய போது அதனை அவர் பெரிது படுத்தவில்லை.
மீறலாகக் கருதுபவை
1. ஐந்து வயதிற்குக் குறைந்த பிள்ளையினை வீட்டில் விட்டு தாய் வெளிநாடு செல்கிறாள்
2. தந்தை பிள்ளைகளை பராமரிக்கும் விடயத்தில் கவலையீனமாக உள்ளார்
3. பெண் பிள்ளைக்கு உடலியல் ரீதியான தண்டனையினை தகப்பன் வழங்குகிறார்
4. மகளுக்கு தந்தை பாலியல் தொந்தரவினையும் செய்கிறார்.
5. பாடசாலை கல்வியினை இடைநிறுத்தியுள்ளார்;.
6. அம்மம்மா தனது பாதுகாப்பினை வழங்கத் தவறுகிறார்.
சிறுவர்களுக்கு செய்யப்படுகின்ற மேற்படி செயல்கள் அவர்களது உரிமைகைளை அனுபவிப்பதை தடைசெய்கிறது. இதனால் பிள்ளைகள் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பாதிப்படைகின்றனர். இவ்வாறான சம்பவம் ஒன்றிற்கு சட்டம் கடுமையான தண்டணைகளை வழங்கும். சிறுவர்களது உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தண்டணைச் சட்டக் கோவையில் பல திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு;ள்ளன.
சிறுவர்களை கொடுமைப்படுத்துதல் குற்றம்
1995ம் ஆண்டின் 22ம் இலக்க தண்டணை சட்டக் கோவை (திருத்தச் சட்டத்தின்படி)
இச்சட்டத்திற்கு அமைவாக, 18வயதுக்கு கீழ்ப்பட்ட ஒருவரை தமது கட்டு;ப்பாட்டில், பொறுப்பில் வைத்திருத்தல் அல்லது பாதுகாப்பில் வைத்திருத்தல், எவராவது வேண்டுமென்றே அவ்வாளைத் தாக்குதல், கொடுமைப்படுத்துதல், புறக்கணித்தல் அந்த பிள்ளையை கைவிடல் ஆகியவற்றிற்கு உட்படுத்தி அல்லது உடந்தையாகவிருந்து சிறுவர்களுக்கு கொடுமை செய்வது குற்றம்.
தண்டணை:
மேற்படி குற்றத்தைச் செய்யும் நபருக்கு, இரு வருடங்களுக்குக் குறையாததும் 10 வருடங்களுக்கு மேற்படாததுமான சிறைத் தண்டணை வழங்கல் வேண்டும்.
காயம் விளைவிக்கும் குற்றம்
எவராவது ஒருவர் வேறு எவருக்கேனும் உடல்நோவினை, நோய் அல்லது வலிமைக் குறைவு ஏற்படுத்துவது 'துன்புறுத்தல்' எனப்படும்.
தண்டணை
இதற்கான தண்டணையாக தண்டணைச் சட்டக் கோவையின்படி, ஒரு வருட கால சிறைத் தண்டணை அல்லது ஆயிரம் ருபாய் தண்டப்பணம் அல்து இரண்டும் வி;தித்து தண்டித்தல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையில்
பால்ய குற்றவாளிகளை வயது வந்தவர்களிடமிருந்து பிரித்து வைக்க வேண்டும் என்பதுடன், அவர்களின் வயது, சட்ட நிலமைகளுக்கு அவசியமானபடி கவனித்தல், விரைவாக தீர்ப்பினைப் பெறுவதற்கு முயற்சித்தல்
1948ம் ஆண்டு ஐ.நா.தாபனத்தினால் கொண்டு வரப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின்படி,
உறுப்புரை 16(3) குடும்பமே சமுதாயத்தில் இயற்கையானதும் அடிப்படையானதுமான அலகாகும். அது சமுதாயத்தினாலும் அரசினாலும் பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையது.
1966ம் ஆண்டு ஐ.நா. தாபனத்தில் கொண்டு வரப்பட்ட பொருளாதார சமூக மற்றும் கலாசார உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையின்படி,
சிறுவர்களின் சுகாதாரத்திற்கும், ஒழுக்கத்திற்கும் பங்கம் விளைவிக்கும் அல்லது வாழ்க்கைக்கு ஆபத்து விளைவிக்கும் அல்லது சாதாரண வளர்ச்சிக்கு தடையாகவுள்ள செயல்களில் ஈடுபடல் தண்டணைக்குரிய குற்றமாகும்.

Post a Comment