Header Ads



ஹக்கீம், றிசாத், ஆசாத் சாலி, ஸ்ரீரங்கா ஆகியோருக்கு மோசமான படுதோல்வி என வர்ணிப்பு

நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது எத்தனை இழப்புக்கள் ஏற்பட்ட போதும் வடக்கு தமிழ் மக்கள் தன்னம்பிக்கையை இழக்கவில்லை என்பது தெரிகிறது. அதே போல் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றி நக்கிப்பிழைக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய ஏமாற்றுக்கட்சிகளை பெரும்பாலான முஸ்லிம்கள் நிராகரித்துள்ளமையையும் காட்டுகிறது. மன்னார், அமைச்சர் ரிசாதின் மாவட்டமாக இருந்தும் அங்கு ஆளுங்கட்சி ஒரு ஆசனத்தையே பெற்றுள்ளதன் மூலம் அவரது கட்சி வட மாகாண முஸ்லிம்களுக்கு உதவாமல் அவர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறது என்பது தெரிகிறது. எதிர் காலத்தில் அவர் தனது கட்சியை தூக்கி வீசிவிட்டு வன்னி முஸ்லிம்களுக்கு வேலை செய்யாவிட்டால் அடுத்த பாராளுமன்ற தேர்தல் அவருக்கு கேள்விக்குறியாகி விடும். அதன் பின் அவரை வைத்து பிழைப்பு நடத்தும் செயலாளர் நாயகம் கல்முனைக்கு ஓட வேண்டிய நிலை வரும்.

அதே போல் 1988ம் ஆண்டு வடக்கும் கிழக்கும் இணைந்த மாகாணத்தில் முஸ்லிம் காங்கிரஸ் 17 உறுப்பினர்களை கண்டது. இன்று 25 சருடங்களின் பின் வடக்கிலும் கிழக்pலும் 8 பேரையே கொண்டிருப்பதன் மூலம் பாதி ஆதரவை அக்கட்சி இழந்துள்ளது என்பதன் மூலம் ரஊப் ஹக்கீமின் தலைமை மறுக்கப்பட்டுள்ளது. இதுதான் ஹக்கீமின் சாதனையாகும். கிழக்கு மாகாணத்தை ஏமாற்றி கொதள்ளையடித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரசின் ஏமாற்று போராளிகள் வடக்குக்கு படை எடுத்தும் அவர்களால் ஒரு உறுப்பினரையே பெற முடிந்துள்ளது என்பது மிகப்பெரிய அவமானமாகும்.

இதன் மூலம் 2005 முதல் முஸ்லிம் காங்கிரசை கடுமையாக விமர்சித்து வரும் எமக்கு பாரிய வெற்றி கிடைத்துள்ளதாகவே நாம் காண்கிறோம். அதே போல் அ. இ. முஸ்லிம் காங்கிரசும் முஸ்லிம்களை ஏமாற்றுகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டிய ஒரேயொரு முஸ்லிம் கட்சியும் நாமே. அந்த வகையில் அக்கட்சியின் தோல்வி எமது பிரச்சாரத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

அதே போல் அசாத் சாலியின் கட்சி புத்தளத்திலும், அவரது ஆட்கள் வடக்கில் போட்டியிட்டும் படு தோல்வி அடைந்திருப்பதன் மூலம் அவரது தலைமையையும் முஸ்லிம் சமூகம் நிராகரித்துள்ளது. அவர் கன்டியில் ஐ தே போட்டியிடாமல் சுயேற்சையாக போட்டியிட்டிருந்தால் படுதோல்வியடைந்திருப்பார் என்பதை இது மிகத் தெளிவாக காட்டுகிறது.

அதே போல தொலைக்காட்சியை வைத்து மக்களை ஏமாற்றலாம் என குதித்த ஸ்ரீரங்கா மோசமான படுதோல்வியை அடைந்துள்ளார். ஐ தே க மூலம் நுவரேலிய மாவட்ட மக்களை ஏமாற்றி வென்ற அவர் மீண்டும் ஐ தே கவில் சேர்ந்தால் மட்டுமே அடுத்த பாராளுமன்றத்துக்கு புட் போட்டிலாவது வர முடியும் என்ற செய்தியை மலையக மக்கள் அவருக்கு புகட்டியுள்ளார்கள்.

     ஆக மொத்தத்தில் முஸ்லிம் தமிழ் மக்களை ஏமாற்றி அரசுடன் ஒட்டிக்கொண்டு சமூகத்தை காட்டிக்கொடுக்கும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் நல்ல பாடத்தை இத்தேர்தலில் கற்றுக்கொடுத்துள்ளார்கள். ஆனாலும் வடக்கு தமிழ் மக்கள் தமது ஜனநாயக ரீதியிலான உரிமைப்போராட்டத்தில் பாரிய வெற்றியை கண்ட நிலையில் முஸ்லிம் சமூகம் இப்போதுதான் ஒரு அடியை எடுத்து வைத்துள்ளது என்பது தான் கவலையான விடயமாகும்.

-முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர்
முஸ்லிம் மக்கள் கட்சி.

11 comments:

  1. நீங்க என்ன சார் சொல்ல வாரிங்க?

    ReplyDelete
  2. Pls you come to the election than you will be identified, do not express that you only the recognised party from the people, do not spit towards the up it will be returned to your face.

    ReplyDelete
  3. முபாறக் மெளலவி அவர்களே , நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது பற்றி இப்போது என்ன சொல்லப் போறீங்க,

    ReplyDelete
  4. நீங்க என்னத்த சாதிக்கபோரிங்க

    ReplyDelete
  5. மௌலவி சாப்..

    நீங்கள் சார்ந்திருக்கும்-சப்போட் பண்ணும் ஐக்கிய தேசியக் கட்சி 25வது தேர்தலிலும் தோற்றுப் போயிருக்கிறது. முதலில் அதைப் பாருங்க சாப்..அப்புறம் முஸ்லிம் கட்சிகளைப் பற்றி விமர்சிக்கலாம்.

    ரிசாத் பிறந்த மாவட்டம் தான் மன்னார் மாவட்டம். அதில் முஸ்லிம்கள் மிகச் சிறுபான்மையினரே. இந்தத் தேர்தலில், இனவாதத் தமிழ் சக்திகள் மேற்கொண்ட உச்சக்கட்ட இனவெறிப் பிரசாரங்களுக்கு மத்தியிலும் அவரது கட்சி கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்த மன்னார் தேர்தல் தொகுதியில், இன்று ஐக்கிய தேசியக் கட்சி பெற்றிருக்கும் வாக்குகளின் எண்ணிக்கையைப் பார்த்து நீங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வேண்டும்!

    விகிதாசாரத்தில் பார்த்தால், இனவாதத்தைப் புறக்கணித்து, தமிழ் மக்களும் ரிசாத் சார்ந்த கட்சிக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்பது புரியும். இந்த நிலைமை இன்னும் இன்னும் கூடும்.

    அது என்ன...ஆளும் கட்சியில் இருப்போரெல்லாம் 'நக்கித் தின்னிகள்' என்று அடிக்கடி புலம்புகிறீர்கள்!? ஒருவேளை, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து (அது இந்த யுகத்தில் நடக்கப் போவதில்லை) நீங்கள் அதில் அங்கம் வகிப்பதாக வைத்துக் கொண்டால், நீங்களும் ஒரு 'நக்கித் தின்னி'யாக அப்போது இருப்பீர்களோ?

    ஏன்...ஐக்கிய தேசியக் கட்சிக்காகப் பொய்ப் பிரசாரம் செய்யும் நீங்கள், அந்தக் கட்சியிடம் இப்போதும் நக்கித் தின்னுகிறீர்களோ என்று கேட்டால், உங்கள் பதில் என்னவாக இருக்கும்....?

    ReplyDelete
  6. 'சொன்னாலும் குற்றமடா... சொல்லாவிட்டால் வெட்கமடா..!'

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-



    ReplyDelete
  7. மௌலவி சாப் அவர்களே .....

    நாம் அனைவரும் முச்ளிமாஹ இருந்து கொண்டு எமது சமூகத்தின் தோல்வியை விமர்சிப்பது எமது தலையில் நாங்களே மண்வாரி போடுவது போல உள்ளது ..

    ஆகவே இவ்வாறான விமர்சனங்களை தவிர்ப்பது நன்று ....

    ReplyDelete
  8. ஏனைய கட்சிகளை விமர்சிப்பதை நிறுத்தி விட்டு ஒரு மௌலவி என்ற ஸ்தானத்தில் இரு;து நம் சமூகத்தை எவ்வாறு ஒரு இலச்சிய சமூகமாக பரினமிக்கச்செய்யலாம் என்பது பற்றி சிந்தியுங்கள் அதற்காக உங்கள் நேரமும் திறமையும் பயன்படட்டும்

    ReplyDelete
  9. UNP,Muslim congress thalamai marawendum ithuwey makkal theerpu

    ReplyDelete
  10. மவுலவி ,சார் எண்ன வீன் போச்சு எல்லா முஷ்லிம் கட்சிகளும் நக்கி திரிகிருர்கள் நீங்க யென்ன சுப்பி திரிகிறிர்களா ,ஒதினமா,நாலு பேறுக்கு நல்லத சொல்லி கூடுக்காம வசனம் பேசுரயா,,கிறுக்கா

    ReplyDelete

Powered by Blogger.