Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் அரிய வாய்ப்பை கைநழுவ விட்டுள்ளது - பசீர் சேகுதாவூத்

(தினகரன்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளியாக இருந்து கொண்டு அரசுடன் இணைந்து போட்டியிடாமல் விட்டது துரதிஷ்டமான விடயமாகுமென மு.கா தவிசாளர் அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வடக்கில் மு.கா அரசுடன் இணைந்து போட்டியிட்டிருப்பின் அது அரசுக்கு மகத்தான வெற்றியைக் கொடுப்பதற்கும் வடக்கு மக்கள் தமிழ்க் கூட்டமைப்புடன் இருப்பதாக கூறும் புலம் பெயர்ந்தோர் மற்றும் ஜெனீவாவுக்கும் நல்ல பதிலடியாக இருந்திருக்கு மெனவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் அரிய வாய்ப்பை கை நழுவ விட்டுள்ளது. மர்ஹும் அஷ்ரப் நடைமுறைச் சாத்தியமான அரசியலை முன்னெடுத்தவர். கட்சியின் மரச்சின்னத்தில் போட்டியிடாமல் பல சந்தர்ப்பங்களில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி கண்டு தமது கட்சியின் தனித்துவத்தையும் தக்க வைத்துக் கொண்டவர்.

அந்த மாபெரும் தலைவரின் சாணக்கியத்தை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்படுவதே நல்லது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடமாகாணத் தேர்தலுக்காக தமிழ்க் கூட்டமைப்பு முன்வைத்துள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் மீண்டும் பிரிவினை வாதம் தலைதூக்க முயற்சி எடுப்பதாகவும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கென தனித் தாய் நாடு என்ற கருத்தை தமிழ்க் கூட்டமைப்பு முன்வைத்துள்ள போதிலும் முஸ்லிம்கள் ஒருபோதும் தனியானதொரு ஆட்சியை எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய இலங்கைக்குள் ஒன்றுபட்டு வாழவே முஸ்லிம்கள் விரும்புகின்றனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.

வடக்கில் தனித்து தேர்தலில் களமிறங்கியுள்ள கூட்டமைப்பு கிழக்கில் மாத்திரம் முஸ்லிம்களுடன் இணைந்து போட்டியிட விரும்புவது அரசியல் சுயநலத் துக்காகவே என்று அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. Good morning. (sariyana thookkam pola).
    Sir they firing out mosques. Trying to removing your wife n sister's hijab. Telling we r extremists. Asking us to go to Saudi Arabia. Where we're you sir. Even rauf hakim didn't understand the fact much. So he is still there but at least seperately bcoz otherwise they will not care after the result came.
    But you went total submission. It's wrong. You will get a good lesson this time.

    ReplyDelete
  2. Basheer and raufhakeem trying to make fool of muslims community pls don't believe them they are very clever to cheat us.

    ReplyDelete

Powered by Blogger.