கூரை மீதேறிய அரசியல்வாதி, கூரை உடைந்து கீழே விழுந்து வைத்தியசாலையில் அனுமதி
(JM.HAFEEZ)
வடமேல் மாகாண சபையில் பிரபல வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் ஐ.தே.க.யின் குருநாகள் மாவட்டப் பாராளுமன்ற அங்கத்தவர் தயாசிரி ஜயசேக்கர விற்கு தான் ஆதரவு வழங்கவில்லை எனத் தெரிவித்து கூறை மீதேறி எதிர்ப்புத் தெரிவித்தவர், கூரை உடைந்து கீழே விழுந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு காயமடைந்தவர் கல்கமுவ பிரதேச சபையின் எதிர்கட்சி அங்கத்தவரான கே. ஆடி அப்பு என்பவராகும். இவர் தயாசிரி ஜயசேக்கரவிற்கு ஆரதவு தெரிவிப்பதாக பிரசாரம் செய்யப் படுவதாகவும் தான் அவ்வாறு செய்யவில்லை என்றும் தெரிவித்து இது தொடர்பாக தனது எதிர்பைத் தெரிவிப்பதற்கு எதிரேயுள்ள கட்டிடம் ஒன்றின் கூறை மீதேறி எதிர்ப்பைத் தெரிவித்துக் கொண்டிருந்த வேளை பாழுங்கட்டிடமான அதன் கூறை உடைந்துள்ளது. அதன் காரணமாக அவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளதாகத் தெரிய வருகிறது. தற்போது அவர் வைத்திய சாலையில் அனுமதிக்ககப்பட்டு சிகிட்சை பெற்று வருவதாகப் பொலீஸார் தெரிவித்தனர்.
Post a Comment