Header Ads



கறை படியாத கரங்களுக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும் - மதுளுவாவே சோபித தேரர்

கறை படியாத, கல்வி கற்ற புத்திஜீவிகளை மக்கள் எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தெரிவுசெய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள மதுளுவாவே சோபித தேரர், வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்காதுவிட்டால் எதிர்காலம் அச்சம் நிறைந்த அத்தியாயமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார்.

போதைப் பொருள் விற்பனையாளர்கள், மதுபான நிலைய உரிமையாளர்கள், விபச்சார தொழில் செய்பவர்கள், ஊழல் மோசடியில் ஈடுபடுபவர்கள், தரகு பணம் பெறுபவர்கள், சமூக விரோதிகள் போன்றவர்களுக்கு வாக்குகளை வழங்காது சமூகத்தில் சிறந்த குணங்களை கொண்டவர்களை மக்கள் வாக்களித்து தெரிவுசெய்ய வேண்டும் என வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள நியாயத்தை எதிர்பார்க்கும் சகல சமூகங்களிடம் கோரிக்கை விடுகின்றேன்.

மக்கள் தாம் தெரிவுசெய்யும் தனது பிரதிநிதி கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரராகவும் படித்த புத்திசாலியானவராக இருக்கின்றாரா என்பதை அறிந்து வாக்களிக்க வேண்டும்.

மூன்று மாகாணங்களின் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தல் நீதியாகவும் நோ்மையாகவும் நடக்கும் என்பதே எமது நம்பிக்கை என மதுளுவாவே சோபித தேரர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.