Header Ads



பாலியல் பலாத்கார குற்றங்களை தடுக்க, பெண் குழந்தைகள் அழகி போட்டியில் பங்கேற்க விரைவில் தடை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களை தடுக்க, 16 வயதுக்கு உட்பட பெண் குழந்தைகள் அழகி போட்டியில் பங்கேற்க பிரான்சில் விரைவில் தடை கொண்டுவரப்பட உள்ளது.பாலியல் குற்றங்களை தடுக்க பிரான்ஸ் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பெண் குழந்தைகள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்படுவதை தடுக்க அவசர சட்டம் இயற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கீழ்சபை கூட்டத்தில் இதுகுறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. பாரம்பரியமிக்க பிரான்சில் சிறுமிகளை ஆபாசமாக சித்தரிக்கும் வகையில் அழகி போட்டிகள் அதிகரித்து வருவது குறித்து எம்.பி.க்கள் கவலை தெரிவித்தனர்.

பின்னர், 16 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகள் அழகி போட்டிக்கு தடை விதிக்கவும் அதை மீறுவோருக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தில் உள்ள 197 பேர் கொண்ட செனட் உறுப்பினர்களில் 146 பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதை தொடர்ந்து விரைவில் சட்டம் இயற்றப்பட உள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு துறை எம்பி சந்தல் ஜூவானே கூறுகையில், பிரான்சில் 6 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள்  பலாத்காரம் உள்பட பல்வேறு செக்ஸ் தொந்தரவுகளால் பாதிக்கப்படுவது குறித்து புகார்கள் வருகின்றன. இதை தடுக்கவே குழந்தைகள் அழகி போட்டிக்கு தடை கொண்டு வரப்பட உள்ளது. தடையை மீறினால் 2 ஆண்டு சிறை, 30 ஆயிரம் யூரோ அபராதம் விதிக்கப்பட உள்ளது என்றார்.

No comments

Powered by Blogger.