மந்தனா இஸ்மாயில் வீட்டுக்குள் மீண்டும் மர்ம நபர்கள்
சண்டேலீடர் இணை ஆசிரியர் மந்தனா இஸ்மாயில் அபேவிக்கிரமவின் வீட்டுக்குள் மீண்டும் புகுந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரது கணிணியை எடுத்துச் சென்றுள்ளனர்.
மந்தனா இஸ்மாயில் பயன்படுத்தும் அறையில் இருந்த கணினியையே இரவு 8 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்த போது வீட்டில் எவரும் இருக்கவில்லை.
கடந்த மாதம் 24ம் நாள் இரவு மந்தனாவின் வீட்டுக்குள் நுழைந்த 5 ஆயுதபாணிகள் அவரை, பயமுறுத்தி விட்டு வீட்டுக்குள் தேடுதல் நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு சென்ற காவல்துறையினர், அவர்களில் ஒருவரைச் சுட்டுக் கொன்று விட்டு ஏனைய நால்வரையும் கைது செய்தனர்.
இதையடுத்து மந்தனா குடும்பத்தினர் அடையாளம் தெரியாத இடத்தில் தங்கியுள்ளனர். இந்தநிலையிலேயே பம்பலப்பிட்டியில் உள்ள அவரது வீடு உடைக்கப்பட்டு கணினி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

அந்தக்கணணியை வைத்து என்ன செய்ய முடியும்,இதிலிருந்து தெரிகின்றது அந்தக்கூட்டத்தின் தலைவன் எவ்வளவு பெரிய புத்திசாலியென்று. ஏண்டா நீங்க சோறுதான் சாப்பிடுறீங்களா இல்ல வேற ஏதாவது சாப்பிடுறீங்களா?
ReplyDeleteநம்ம இலங்கை எனும் திருநாட்டில் மாதம் ஒருமுறை இப்படியான நிகழ்வுகள் நடக்கவிட்டால் தான் நாங்கள் அதிசியபடனும்.
ReplyDeleteவாய் கிழிய ஊடக சுதந்திரம் பற்றி பேசும் கோஷ்டி எங்கே சென்றார்கள்?