ஜனாதிபதி மஹிந்த என்னிடம் மன்னிப்பு கேட்டார் - நவநீதம்பிள்ளை
இலங்கை விஜயத்தின் போது சுதந்திரமாக செயற்பட தடைகளாக காணப்பட்ட சாட்சிகள் மீதான அச்சுறுத்தல்கள் மற்றும் அமைச்சர்களின் விமர்சனங்கள் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவலையடைந்ததாகவும் அதற்காக மன்னிப்புக் கேட்டதாகவும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்தார்.
ஐ.நா.அலுவலகத்தில் நேற்று சனிக்கிளமை இடம்பெற்ற செய்தியாளார் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து மனித உரிமைகள் ஆணையாளர் தொடர்ந்தும் கூறுகையில்,
கடந்த ஆறுநாட்களாக இலங்கையின் மனித உரிமைகளின் நிலைமையை மதிப்பீடு செய்யும் பணியில் ஈடுபட்டேன். இதற்காக சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் காணப்பட வேண்டும். எனது இலங்கைக்கான நிகழ்ச்சி நிரலை முழுமையாக்க வேண்டும் என்பதற்காக மிகவும் பங்களிப்புடன் செயற்பட்டேன்.
ஆனால் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது அவர்கள் என்னிடம் பல்வேறு பிரச்சினைகளை கூறினார்கள். இவர்களை பொலிஸ் மற்றும் இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர். இது மிகவும் தவறான விடயமாகும். சாட்சியங்களை அச்சுறுத்தும் போத என்னால் சுதந்திரமாக செயற்பட முடியாது.
அதே போன்று குறிப்பிட்ட சில அமைச்சர்கள் எனது விஜயத்தை விமர்சனம் செய்தனர். இது எனது நிகழ்ச்சி நிரலை பாதிக்கும் விடயமாகும். அவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் எடுத்துரைத்த போது அவற்றுக்காக மனம் வருந்துவதாகவும் மன்னித்துக் கொள்ளுமாறும் அவர் என்னிடம் தெரிவித்தார் எனக் கூறினார். vi

Post a Comment