Header Ads



பிரித்தானியாவின் ATM நிதி மோசடி - 4 இலங்கையர்கள் கைது

பிரித்தானியாவின் க்கௌஸ்டெசெயார் பிராந்தியத்தில் இடம்பெற்ற நிதி இயந்திர மோசடிகளுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் நேற்று 27-09-2013 நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பசீர் முஸ்தபா இப்ராஹிம், அசோக் பாலசுப்ரமணியம், தன்பாவேல் வில்வநாதம் மற்றும் குசலகுமார் சிதம்பரபிள்ளை ஆகிய நான்கு பேரும் இந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 23ம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.

அவர்கள் அந்த பகுதியில் உள்ள சுமார் 10 ஏ.டி.எம் இயந்திரங்களில் போலியான அட்டைகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

வழக்கினை விசாரணை செய்த மாவட்ட நீதவான் மார்டின் ப்ரௌன் அவர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.