Header Ads



நாட்டில் தொழில் வாய்ப்பின்மை 9.2 வீதமாக உயர்வு

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், உயர்தரம் மற்றும் அதனைவிட அதிகமான கல்வித் தகைமை கொண்டவர்களின் தொழில் வாய்ப்பின்மை 9.2 வீதமாக காணப்படுவதாக தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வருடத்தின் முதல் காலாண்டின் நிறைவில், மொத்த வேலைவாய்ப்பின்மை 4.6 வீதமாக காணப்பட்டதாக திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

அத்துடன் 2012 ஆம் ஆண்டின் நிறைவில், நாட்டின் தொழில்வாய்ப்பின்மை வீதம் 4 வீதமாக காணப்பட்டதாகவும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தரவுகள் குறிப்பிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.