Header Ads



உலகம் முழுவதும் 800 மில்லியன் பயனர்களை கொண்டுள்ள யாஹூ

யாஹூ தலைமை நிர்வாக அதிகாரியான மரிசா மேயர் யாஹூ இண்டர்நெட் நிறுவனம் இப்போது 20% அதிகரித்து, உலகம் முழுவதும் சுமார் 800 மில்லியன் பயனர்களை கொண்டுள்ளது என்று கூறியுள்ளார். சான் ஃப்ரான்சிஸ்கோவில் நடைபெற்ற ஒரு தொழில்நுட்ப மாநாட்டில் யாஹூ இன்கார்ப்பரேஷன் அதன் சமீபத்திய ஆதாரத்தை வெளிட்டுள்ளது.

யாஹூவில் இண்டர்நெட் சேவை அதிகரித்த போதிலும், ஆன்லைனில் இன்னும் அதன் விளம்பர வருவாய் பெருக்குவதற்காக போராடிக்கொண்டிருக்கிறது. கூகுள் மற்றும் மற்றொரு போட்டியாளரான, ஃபேஸ்புக் இன்க், செல்வாக்குடன் இருந்தபோதிலும் சமீபத்திய காலாண்டுகளில் யாஹூ நிறுவனத்தின் விளம்பர வருவாய் அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், யாஹூவின் வருவாய் வளர்ச்சியை தூண்டுவதற்கு தனது மூலோபாயத்தை குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் விரிவடைக்க வேண்டும் என்றும் மேயர் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.