வாடிக்கையாளர்களிடம் 80 இலட்ச ரூபாவை திருடிய வங்கி உதவி முகாமையாளர் சிக்கினார்
(Tn) வாடிக்கையாளர்களின் வரவுகளில் வைப்புச் செய்ய வேண்டிய சில்ல றைக்காசுகள், சதங்களை கணக்குகளில் பதியாமல் தனது கணக்கில் வரவு வைத்து வந்த பண்டாரவளை பகுதி அரச வங்கியொன்றின் உதவி முகாமையாளர் கைது செய்யப் பட்டுள்ளார். 06 வருடங்களாக இவர் பதுக்கி வைத்து 80 இலட்ச ரூபாவை சேமித்துள்ளார். கொழும்பு குற்றத் தடுப்பு திணைக்களத்திடம் இவரை விசாரணைக்காக ஒப்படைத்துள்ளதாக பண்டாரவளை பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
மேற்குறிப்பிட்ட உத்தியோகத்தர் தனது கணக்கில் சுமார் எண்பது இலட்சம் ரூபாவை மோசடி செய்து வரவு வைத்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. இந்த தொகையை சுமார் ஆறு வருடங்கள் முதல் சேமித்துள்ளதாக தெரிவிக் கப்படுகிறது.
வாடிக்கையாளர்களின் வட்டிப்பணங்கள் உள்ளிட்ட கொடுக்கல் வாங்கல்களின் போதும் சில்லறை, சதக் கணக்குகளை குறிப்பிடாது தனது கணக்கில் வரவு வைத்து வந்துள்ளதாக தெரிய வருகிறது. குறித்த உத்தியோகத்தரின் சேவை தற்போது இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

pls! mention the name of the bank in which bank it happen,
ReplyDeleteso the public can be more caution on this matters.