Header Ads



யெமனில் 8 வயது சிறுமி திருமண முதலிரவில் மரணம்

யெமன் நாட்டில் 40 வயது நபருக்கு மணம் முடித்து வைக்கப்பட்ட 8 வயது சிறுமி ஒருவர் திருமண இரவில் பாலியல் அதிர்வால் ஏற்பட்ட உட்காயத்தால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.

ரவன் என்று மாத்திரம் அடையாளப்ப டுத்தப்பட்டிருக்கும் இந்த சிறுமியின் பிறப்புறுப்பில் ஏற்பட்ட காயத்தைத் தொடர்ந்து கடும் இரத்தப் போக்கு காரணமாக மரணமடைந்திருப்பதாக குவைட் நாளிதழான அல் வதான் செய்தி வெளியிட்டுள்ளது. வடமேற்கு யெமனின் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் குறித்த சிறுமியின் கணவர் மற்றும் குடும்பத்தினரை கைது செய்யுமாறு மனித உரிமை அமைப்புகள் அழுத்தம் கொடுத்துள்ளதோடு சிறுபராய திருமண சடங்கையும் முடி வுக்கு கொண்டு வருமாறு கோரியுள்ளன. யெமனில் கால்வாசிக்கும் அதிகமான பெண்கள் தனது 15 ஆவது வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து வைக்கப்படுவதாக ஐ.நா.வின் மக்கள் தொகை நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Thinaharan

2 comments:

  1. இக்கொடுமை புரிந்தவர்களுக்கு சட்டம் கடும் தண்டனை வழங்கவேண்டும். இஸ்லாமிய முறை இஸ்லாமிய முறை என்று சொல்லி பச்சக்குழந்தைகளை நாசமாக்கும் காமகர்களுக்கு முடிந்தால் துக்குத்தண்டனை கொடுக்கவும்.

    ReplyDelete
  2. even mohd.nabi married a very young child called "Ayisha"........ :-)

    ReplyDelete

Powered by Blogger.