Header Ads



சிங்கள மாணவர்க்கு 8, தமிழ் மாணவர்க்கு 3, முஸ்லிம் மாணவர்க்கு 1 - ஹக்கீம் நியாயம் கேட்பு

(J.M.Hafeez and Mohamed Asik)

சகல மாகாணங்களிலும் தமிழ் மொழி மூல மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்று நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவருமான றவூப் ஹகீம் தெரிவித்தார்.

(25.9.2013) அக்குறணை சாஹிரா தேசிய பாடசாலையின் பவளவிழா வைபவத்தில் விசேட அதிதியாகக் கலந்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

மத்திய மாகாணத்தில் நீண்ட காலமாக தமிழ்ப் பாடசாலைகளுக்கென்று மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் இருந்து வருகிறார். அதே விதம் சகல மாகாணங்களிலும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக் கென்று தனியான மேலதி மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஒருவர் வீதம் நியமிக்கப்படவேண்டும்.

மத்திய மாகாண சபையில் நிறைவேற்ப்பட்ட தீர்மானத்தில் அடிப்படையில் சிங்கள, தமிழ் முஸ்லிம் பாடசாலைகளுக்கு முறையே 8.3.1. என்ற வீதத்திலே வளப் பங்கீடு இடம் பெறுகிறது. அதாவது சிங்களப் பாடசாலைக்கு 8 கோடி ருபா ஒதிக்கினால் முஸ்லீம்பாடசாலைக்கு ஒரு கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படும். அதே நேரம் தமிழ் பாடசாலைக்கு 3 கோடி ஒதுக்கப் படும். இதில் பல குறைபாடுகள் இருக்கின்றன. இவ்விகிதம் மாணவர் எண்ணிக்கைக்கு அல்லது இன விகதாசாரத்திற்கு ஏற்புடையதாக இல்லை. இது மாற்றப் படவேண்டும் என்றார்.

கல்வி அமைச்சராக பந்துல குணவர்தனா பொறுப்பேற்றது முதல் இன்று வரை பாரிய மாற்றங்களைச் செயய்து வருகிறார். அதன் அடிப்படையில் வெகு விரைவில் புதிய கல்வி கொள்கை மாற்ற முன் வரைவு ஒன்று அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட உள்ளது. எதிர்காலத்தில் கல்வித்துறையில் இலங்கையில் பாரிய மாற்றம் ஒன்று ஏற்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.