கத்தார் தொழில் அதிபரிடம் பிரான்ஸ் விமான நிலையத்தில் 75 லட்சம் கொள்ளை
பிரான்சில் உள்ள பாரிஸ் விமான நிலையத்தில் கத்தார் நாட்டு தொழிலதிபரிடம் இந்தியா ரூ.75 லட்சம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் ரோய்சி சார்லஸ் டி கெவுலி விமான நிலையத்துக்கு கத்தார் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வந்தார். அவர் அங்கிருந்து காரில் செல்ல முயன்றார். அப்போது மர்ம கும்பல் ஒன்று அவரது காரை வழிமறித்தது. அவரை சரமாரியாக தாக்கி விட்டு அவரிடம் இருந்த ரூ.25 லட்சத்தை பறித்து கொண்டு தப்பி சென்றது. இந்த சம்பவம் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.
இதனையடுத்து தொழில் அதிபர் அவசர எண்ணுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை என பாரிஸ் நகர போலீசார் தெரிவித்தனர். தொழிலதிபரை குறி வைத்து தாக்கப்பட்ட சம்பவமா அல்லது ஏதேச்சையாக வழிப்பறி கும்பல் காரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றதா என விசாரித்து வருகின்றனர்.
தலைநகர் பாரிசில் அடிக்கடி இதுபோல் நடைபெறும் கொள்ளை சம்பவங்கள் போலீ சாருக்கு தலைவலியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த மார்ச் மாதம் இதேபோல் சுற்றுலா வந்த 23 சீன பயணிகளிடம் 10 ஆயிரம் டாலரை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது குறிப்பிடத்தக்கது.
Post a Comment