Header Ads



75 வாக்குகள் வித்தியாசத்தில் 2 வது ஆசனத்தை இழந்தோம் - அமைச்சர் றிசாத் பதியுதீன்

தம்மை இலக்குவைத்து தமிழ் அரசியல்வாதிகளும் அவை சார்பு ஊடகங்களும் இன,மத வெறி பிரச்சாரங்கைள மேற்கொண்டதாக தெரிவித்த அமைச்சர் றிசாத் பதியுதீன், மன்னார் மாவட்டத்தில் தாம் 75 வாக்குகளினால் 2 ஆவது ஆசனத்தை இழந்ததாக குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்

தமிழ் ஊடகங்கள் திட்டமிட்டு எனக்கு எதிராக செயற்பட்டன. தமிழ் எம்.பி.க்கள்  வெளிப்படையாக இனவாதம் பேசினர். மதகுருமார் எனக்கெதிராக செயற்பட்டனர். எமது சமூக சில  சகோதரர்களும் தமிழ் தேசிய அமைப்பின் பிரச்சாரங்களுக்கு ஏமாந்துவிட்டனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  வடமாகாண சபையில் 2 ஆசனங்களை பெற்றுள்ளது. முல்லைத்தீவில் ஜனுவர் வெற்றி பெற்றுள்ளார். மன்னாரில் றிப்கான் பதியுதீன் வெற்றி பெற்றுள்ளார்.

நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காத போதிலும் 75 வாக்குளினால் ஒரு ஆசனத்தை இழந்தமை கவலைக்குரியது. இருந்தபோதும் முஸ்லிம் சமூகத்தினருக்கான எனது சேவைகள் தொடரும் என்றார்.

1 comment:

  1. தொடரட்டும்... தொடரட்டும்..!

    தோல்விகளின் பெறுமானம் சொற்ப அளவாக இருந்தாலே நன்கு புரியும்!

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete

Powered by Blogger.