Header Ads



70 வயதிற்கு மேற்பட்டவர்களின் கவனத்திற்கு..!

(ஏ.பி.எம்.அஸ்ஹர்)

எதிர் வரும் அக்டோபர் 1ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள சர்வதேச சிரேஷ்ட பிரஜைகள் தினத்தை முன்னிட்டு 70 வயதிற்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் கௌரவிக்கப்படவுள்ளனர். சமுக சேவைத்திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் 70 வயதிற்கு மேற்பட்ட பலவழிகளிலும் சமுகத்திற்குச் சேவையாற்றியவர்கள் மற்றும் சேவையாற்றி கௌரவிக்கப்பட்டவர்களும் இதில் கௌரவிக்கப்படவுள்ளனர்.

ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு ஒரு சிரேஷ்ட பிரஜை எனும் அடிப்படையில் கௌரவிக்கப்படவுள்ள இதில் தாமும்; கௌரவிக்கப்படத்தகுதியானவர்கள் எனக்கருதுவோர் தங்களது பிரிவின் கிராம உத்தியோகத்தருடன் தொடர்புகொண்டு விண்ணப்பப்படிவங்களைப்பெற்று விண்ணப்பிக்கமுடியும் அல்லது பிரதேச செயலகங்களிலுள்ள சமுக சேவை உத்தியோகத்தர்களுடன் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப்பெற்றுக்கொள்ளமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இதில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளவர்கள் கட்டாயம் கிராம சேவை உத்தியோகத்தர்களின் சிபாரிசைப்பெற்றிருக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.