இலங்கையில் 65 வீதமானவர்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படக் கூடும்
இலங்கையில் 65 வீதமானவர்கள் எதிர்காலத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படக் கூடும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
அதன்படி நாட்டின் கிராம புறங்களைச் சேர்ந்த 10 வீதமானவர்களும், நகர் புறங்களைச் சேர்ந்த 15 வீதமானவர்களும் ஏற்கனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் செயற்கை உணவு, துரித உணவு வகைகளை அதிகளவில் பயன்படுத்துவதனால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் அதிகமானவர்கள் எந்தவிதமான உடற்பயிற்சிலும் மேற்கொள்வதில்லை எனவும் சுகாதார அமைச்சின் புள்ளி விபரத் தகவல்களின் மூலம் அறியமுடிகின்றது.
எனவே மக்கள் தமது வாழ்க்கை முறைமை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment