Header Ads



ஈராக்கில் பொலிஸ் நிலையம் மீது தாக்குதல் - 65 பேர் மரணம், 91 பேர் காயம்

ஈராக்கில் பெய்ஜி நகரில் போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. நேற்று மாலை 4 தற்கொலை படைகள் அங்குள்ள போலீஸ் கமாண்டோ படை பிரிவுக்குள் புகுந்தனர். இதற்கிடையே மற்ற 3 தற்கொலை படைகள் இடுப்பில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க செய்தனர்.

அதில் 7 போலீசார் பலியாகினர். 21 பேர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் பாக்தாத் அருகேயுள்ள சதார் நகரில் இறந்த ஒருவரின் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் கூட்டத்தில் புகுந்த தற்கொலைபடைகள் குண்டுகளை வெடிக்க செய்தனர். அதில் 58 பேர் பலியாகினர். 70 பேர் காயம் அடைந்தனர். இவ்விரு சம்பவங்களில் 65 பேர் இறந்தனர். 91 பேர் காயம் அடைந்தனர்.

No comments

Powered by Blogger.