மீன்பிடிக்க குண்டு விசவே, 6 சிறுவர்கள் வபாத்
ஆப்கானிஸ்தான் நாட்டில் மீன் பிடிப்பதற்கு கையெறி குண்டுகளையும், ராக்கெட் குண்டுகளையும் நீரில் வீசுவது சகஜமான ஒன்றாக இருந்து வருகின்றது. சில இடங்களில் சாதாரண ஒயர் மூலம் மின்சாரத்தை நீரில் செலுத்தியும் பொதுமக்கள் மீன்களைப் பிடிக்கின்றனர். இதனால் அருகில் நீந்திக் கொண்டிருப்பவர்களுக்கு ஆபத்து ஏற்படும் போதிலும், இத்தகைய பழக்கங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
சென்ற வெள்ளிக்கிழமையன்று, ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான பக்லானில் உள்ள தோஷி மாவட்டத்தில் எட்டு காவலர்கள் அங்குள்ள நதியில் மீன்பிடிக்க முயன்றனர். இதற்காக இவர்கள் தங்களிடமிருந்த ராக்கெட் வெடிகுண்டை நீரினுள் வீசியுள்ளனர். ஆனால், அது தவறுதலாக ஆற்றுக்கு அருகில் தண்ணீர் தேங்கியிருந்த சிறு குட்டையில் விழுந்து வெடித்தது. இதனால், அங்கு நீந்திக் கொண்டிருந்த ஆறு சிறுவர்கள் இறந்தனர். இரண்டு பேர் காயமடைந்தனர். தவறுதலாக நடந்த சம்பவம் என்றபோதிலும், அந்தக் காவலர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டுள்ளனர்.
இறந்தவர்களின் வயது 10லிருந்து 14க்குள் இருக்கும் என்று இந்தத் தகவலை உறுதி செய்த அந்த மாகாணத்தின் செய்தித் தொடர்பாளர் அஹமத் ஜாவித் பஷாரத் தெரிவித்தார்.

Post a Comment