Header Ads



வட மாகாண சபை தேர்தலுக்கு எதிராக 5 மனுக்கள் - இன்று புதன்கிழமை விசாரணை

(Tm) எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வட மாகாண தேர்தலை நடத்துவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து மனுக்கள் இன்று புதன்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளன.

இந்த விசேட விண்ணப்பங்கள் பிரதம நீதியரச மொஹான் பீரிஸ், நீதியரசர்களான கே.ஸ்ரீபவன், ரோஹினி மாரசிங்க ஆகியோரை கொண்ட குழு முன்னிலையில் விசாரிக்கப்படவுள்ளது.

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர, தேசப்பற்றுள்ள பௌத்த முன்னணியின் செயலாளர் பெங்கமுவ நாலக தேரர், சுவர்ண ஹன்ச அமைப்பின் தலைவர் புனயேனேந்திரன் அல்விஸ், பௌத்த வழி நிறுவன தலைவர் சத்தசிஸ்சந்தர தர்மசிறி மற்றும் யாழ். பௌத்த சங்க தலைவர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசபிரிய ஆகியோரை இந்த வழக்கின் பிரதிவாதிகளாக இவர்கள் காட்டியுள்ளனர்.

No comments

Powered by Blogger.