Header Ads



எமனில் ராணுவ முகாம்கள் மீது தாக்குதல் - 56 வீரர்கள் மரணம்

ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக அல்கொய்தாகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளையும் அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அதேசமயம் ஏமனுக்கு உதவி செய்து வரும் அமெரிக்கா, ஆளில்லா விமான தாக்குதல் மூலம் அல்கொய்தாககளை அழித்து வருகிறது.

இந்நிலையில், தெற்கு ஏமனில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து அல்கொய்தாகள் 20-09-2013 தாக்குதல் நடத்தினர். அல்-நஷாமாவில் உள்ள முகாமில் இரண்டு கார் குண்டுகள் வெடித்ததில் 48 வீரர்கள் உடல் சிதறி இறந்தனர். மேபாவில் உள்ள முகாமில் அதிகாலையில் துப்பாக்கியுடன் புகுந்து சரமாரியாக சுட்டதில் 8 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அரேபிய தீபகற்பத்தை சேர்ந்த அல்கொய்தா அமைப்பினர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட வீரர்கள் அனைவரும், அல்கொய்தா ஆதிக்கம் நிறைந்த ஷாபா மாகாணத்தில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் பாதுகாப்பு பணிக்காக ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



http://www.aljazeera.com/news/middleeastDeadly%20attacks%20target%20Yemen%20military/2013/09/20139207344124361.html



No comments

Powered by Blogger.