Header Ads



மலேசியாவின் 56வது தேசிய தினம் இலங்கையில் கொண்டாடப்பட்டது (படங்கள்)

(ஏ.எஸ்.எம்.ஜாவித்)

மலேசியாவின் 56வது தேசிய தினம் கடந்த வியாழக்கிழமை (05) கொண்டாடப்பட்டது. மேற்படி தினத்தை முன்னிட்டு இலங்கையில் உள்ள மலேசிய தூதுவராலயம் தேசிய தின நிகழ்வினை கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இலங்கைக்கான மலேசிய தூதுவர் அஸ்மி ஷெய்னுடீன் தலைமையில் ஏற்பாடு செய்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி திஸ்ஸ விதாரன கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது இலங்கையில் உள்ள ஏனைய வெளிநாட்டு தூதுவராலயங்களின் பிரதிநிதிகள், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மார்க்க அறிஞர்கள், ஊடகவியலாளர்கள்  உட்பட பல பிரமுகர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

மேற்படி நிகழ்வில் இலங்கைக்கான மலேசிய தூதுவர் அஸ்மி ஷெய்னுடீன் மற்றும் பிரதம அதிதி சிரேஷ்ட அமைச்சர் கலாநிதி திஸ்ஸ விதாரன ஆகிய இருவரும் உரை நிகழ்த்துவதையும் நிகழ்வில் கலந்து கொண்டவர்களையும் தேசிய தின நிகழ்வினை முன்னிட்டு பிரதம அதிதியும் தூதுவரும் கேக் வெட்டுவதையும் அருகில் தூதுவரின் பாரியார் பாஷா அஸ்மியையும் படங்களில் காணலாம்.

No comments

Powered by Blogger.