வெலிஓயா பிரதேசத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு 500 நிரந்தர வீடுககள்
(ஏ.எல்.எம்.தாஹிர்)
பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இடம் பெயர்ந்து வெலிஓயா பிரதேசத்தில் மீளக்குடியேறிய மக்களுக்கு 500 நிரந்தர வீடுகளை மீள் குடியேற்ற அமைச்சு நிர்மாணித்துக் கொடுத்துள்ளதாக மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்தண வீரகோன் தெரிவித்தார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
மீள்குடியேற்ற நடவடிக்கைகளை அரசாங்கம் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அத்துடன் மீள்குடியேறிய மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக்கொடுத்துள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் அமைச்சு முறையாக மேற்கொண்டு வருகின்றது.
இந்த வகையில், வெலிஓயா பிரதேச செயலகப் பிரிவில் மீள் குடியேறிய மக்களுக்கு நிர்மாணிக்கப்பட்ட 500 நிரந்தர வீடுகளை அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (18.09.2013) புதன் கிழமை வெலிஓயாவில் இடம் பெற்றது. அத்துடன் இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 357 வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டமும் நேற்று ஹெலம்பவௌ பிரதேசத்தில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கான வீடு, பாதை, மின்சாரம், நீர்பாசனம், போக்குவரத்து, பாடசாலை உட்பட உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்காக வெலிஓயா நிலையான அபிவிருத்தித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன், இத்திட்டத்திற்கு மேலதிகமாக சமூக நல அபிவிருத்திகளை மேற்கௌ;வதற்கென மீள் குடியேற்ற அமைச்சு 2760 இலட்சம் ரூபா நிதியினையும் ஒதுக்கியுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மீள்குடியேற்ற அமைச்சு, நீர்பாசன பொறியியல் சேவைகள் வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சு, நீர்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து இவ்வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இவ்வீட்டுத் திட்டத்திற்கு வீடொன்றைக் கட்டுவதற்காக மீள்குடியேற்ற அமைச்சு 3 இலட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இத்திட்டம் மக்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் வீடொன்று 5 இலட்சம் ரூபா பெறுமதியானதாக அமையப் பெறுகிறது.
மேலும், இந்த அபிவிருத்திப் பணிகளை மேற் கொள்வதற்கு அநுராதபுர மாவட்ட செயலகம், முல்லைத்தீவு மாவட்ட செயலகம், வெலிஓயா பிரதேச செயலகம், மஹாவலி அதிகார சபை, தேசிய வீடமைப்பு அதிகார சபை, இலங்கை இராணுவம் மற்றும் சிவில் பாதுகாப்பு படைப்பிரிவு ஆகியன தமது சுய பங்களிப்பினை வழங்கியுள்ளன.
இந்நாட்டு கிராம அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு புதுப் பொலிவொன்றினை வழங்கும் திட்டமாக அரசாங்கம் இதனை மேற் கொள்கின்றது. அதே போன்று இத்திட்டம் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு நிரந்ததர வீடுகளை வழங்கும் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் உறுதி மொழியினை வெற்றி கரமாக நிலை நாட்டிய இன்னுமொரு சந்தர்ப்பம் எனவும் அமைச்சர் குணவர்த்தன வீரகோண் மேலும் தெரிவித்தார்.
Post a Comment