Header Ads



குழியில் விழுந்ததில் 5 வயது சிறுவன் வபாத் (படங்கள்)

(பழுளுல்லாஹ் பர்ஹான்)

குழி தோண்டிக்கொண்டிருந்த வேளையில் குழியில் விழுந்து ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த 05வயது சிறுவன் பலியான சம்பவமொன்று இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் காத்தான்குடி விடுதி வீதி 03ம் குறுக்கு லேனில் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த விடுதி வீதி 03ம் குறுக்கு லேனில் அமைந்துள்ள வீடொன்றில் வீட்டுத் தேவைக்காக ஒரு குழியொன்று தோண்டப்பட்டுள்ளது.இவ்வேளையில் குழிக்கு அருகாமையில் இருந்த அந்த வீட்டைச் சேர்ந்த இரு சிறுவர்கள் குழி சரிந்ததனால் குழியில் விழுந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் முஹம்மட் ஆதில் வயது-05 எனும் சிறுவன் காத்தான்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் போதே மரணித்துள்ளதாகவும் மற்ற இருவரும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் மரணித்தவரின் சகோதரன் முஹம்மட் ஜெய்ன் அதிதீவிர சிகிச்சைக்காக மட்டக்களப்பு பேகாதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளதாகவும் குழிதோண்டியவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மரணித்த இச்சிறுவன் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரது தந்தை  தொழில் நிமித்தம் கடந்த 03மாதங்களுக்கு முன்னர் கட்டார் நாட்டுக்கு சென்றுள்ளார். இவரது தாயும் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில்தான் இவர் உட்பட நான்கு பிள்ளைகளையும் வளர்த்து வந்துள்ளார்.

இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன்; மரணித்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



No comments

Powered by Blogger.