5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டில் 7000 ஆசிரியர்கள்
(எம்.எம்.ஏ.ஸமட்)
செவ்வாய்க்கிழமை (3-9-2013) ஆரம்பிக்கும் 5ஆம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் 7000 ஆசிரியர்கள் ஈடுபடுவர் என இலங்கைப் பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் ஜயந்த புஷ்பகுமார தெரிவிக்கிறார். இது தொடர்பில் அவர் குறிப்பிடுவதாவது,
கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள மதிப்பீட்டுப் பணிகள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை 3ஆம் திகதி ஆரம்பித்து 9ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இவ்விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் 7000 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர். பரீட்சை முடிவுகளை ஒக்டோபர் மாத்தின் இறுதியில் வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
அத்துடன் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த 27ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இதேவேளை, நடந்து முடிந்த 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள்களில் கேட்கப்பட்டிருந்த ஒரு சில கேள்விகள் பாடவிதானத்து அப்பாற்பட்டதென்ற குற்றச்சாற்றுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், 5ஆம்தரப் புலமைப்பரிசில் பரீட்சசைக்குத் தோற்றிய எந்தவொரு மாணவருக்கும் அநீதி இழைக்கப்படாது என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில கல்வி அமைச்சில் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment