Header Ads



சவூதி அரேபியாவில் 5 மாதங்களில் 2.5 பில்லியன் ரியால் போதைமருந்துகள் பறிமுதல்

கட்டுப்பாடுகளுக்குப் பெயர் பெற்ற சவூதி அரேபியாவில், கடந்த ஐந்து மாதங்களில் மட்டும் சுமார் இரண்டரை பில்லியன் ரியால்கள் மதிப்புள்ள போதை மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 991 கடத்தல்காரர்கள் பிடிபட்டுள்ளதாகவும், அவர்களுள் 654 பேர் 33 நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டவர் என்றும், 337 பேர் மண்ணின் மைந்தர்கள் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

கடத்தல்காரர்களுக்கும் காவலர்களுக்கும் இடையே சம்பவித்த மோதல்களில் 19 பேர் காவலர்கள் காயமடைந்ததாகவும், மூன்று கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டு, 11 பேர் காயம்பட்டதாகவும், சவூதி காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டவற்றுள், சுமார் 14.5 மில்லியன் சவூதி ரியால்கள், 350 எந்திரத் துப்பாக்கிகள், 136 கைத்துப்பாக்கிகள், 29 சிறு துவக்குகள், 7,580 துப்பாக்கிக் குண்டுகளும் அடங்கும் என்று அச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.