Header Ads



தமிழ் தேசியக் கூட்டமைப்பு 4 வது ஈழப்போருக்கு அனுமதி கேட்கின்றார்கள் - றிசாத்

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வடக்கில் வாழும் மக்களின் சுபீட்சத்திற்கு ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஆற்றிவரும் பணிகளை மேலும் அதிகரித்துக் கொள்வதற்கான மற்றுமொரு சந்தரப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களை பிளவுபடுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

வவுனியா மற்றும் புத்தளம் பிரதேசங்களில் நேற்று  இடம்பெற்ற இறுதி தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் அவர் பேசுகையில் கூறியதாவது,

கடந்த காலத்தின் நினைவுகளையும், அழிவுகளையும் மக்கள் மறந்து வாழுகின்ற பொழுது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு அம்மக்களிடத்தில் சென்று 4 வது ஈழப்போருக்கு அனுமதி தாருங்கள் என  கேட்கின்றார்கள். ஏன் இந்த அநியாயத்தை இவர்கள் செய்கின்றார்கள் என் ஆராய்ந்து பார்த்தால் வெளிநாட்டு சக்திகள் இவர்களின்; பின்னால் நின்று செயற்படுவதை காணமுடிகின்றது. 30 வருட காலமாக வடக்கில் சிதைவடைந்து போயிருந்த தமிழ்-முஸ்லிம் இன உறவு இன்று மீண்டும் கட்டியெழுப்பபடுகின்ற சூழலில் அவற்றை சீர்குலைத்து குறுகிய அரசியல் லாபம்  தேடும் சக்திகளின் வலையில் எமது மக்கள் சிக்கிவிடக் கூடாது.

இன்று எமக்கு தேவையானது அபிவிருத்தி, அழிந்து போன எத்தனையோ கட்டிடங்கள் இன்று புதுப்பொழிவு பெற்றுள்ளது. நவீன பாதைகள் ஏற்படுத்தப்பட்டுவருகின்றன. அரச நியமனங்கள்,மற்றும் வறுமை ஒழிப்புக்கான திட்டங்கள் என்பன மக்கள் மத்தியில் சென்றடைந்துள்ளன. இவ்வாறு இன்னும் எத்தனையோ அபிவிருவிருத்திகளை கொண்டுவருகின்ற போது அவற்றை மக்கள் அனுபவிக்கவிடாது, அரசாங்கத்தின் எதிரிகளாக காட்டும் அநியாயத்தை சிலர் செய்கின்றனர்.

அமைப்புக்கள் என்று உருவாக்கி கொண்டு எதையும் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியாதவர்கள், மக்களை பிழையாக வழி நடத்த அறிக்கைகளை வெளியிடுவதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார்.

வடக்கில் மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு மின்சார வசதிகள் தற்போது ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகின்றது இதன் இம்மக்கள் தமது சுயதொழில் வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ள முடியும் என்றும் கூறினார். எனவே இந்த மாகாண சபை தேர்தலில் எமது அணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை வன்னி மாவட்ட உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறினார்.

No comments

Powered by Blogger.