Header Ads



வாக்களிப்பதற்கு வசதியாக சம்பளத்துடன் 4 மணித்தியால விடுமுறை

(ஏ.எல்.ஜுனைதீன்)

  எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவிருக்கும் வடவடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தலில் வாக்களிப்பதற்காக 1988 ஆம்  ஆண்டின் 2 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் 123 ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கிணங்க தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு சம்பள குறைப்பற்ற குறைந்த பட்சம்  4 மணித்தியால்  விடுமுறை வழங்குதல் வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய 18 ஆம் திகதி புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிவித்தலில் தெரிவித்துள்ளார்.
  இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

  தனது வேலை நிலையத்திலிருந்து தனக்குரிய வாக்கெடுப்பு நிலையத்திற்கு சென்று வாக்களித்து விட்டு திரும்பி வருவதற்கு 4 மணித்தியாலம் போதாத தொழிலில் ஈடுபட்டுள்ளோருக்கு அதற்காக போதுமானளவு காலத்தை வழங்குவதற்குத் தொழில் தருநர்கள் நடவடிக்கை எடுத்தல் வேண்டுமென அனைத்து தொழில் தருநர்களுக்கும் அதாவதுஇ அரச கூட்டுத்தாபன சபகளின் தலைவர்கள் அரச மற்றும் தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள்இ தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள்இ தோட்ட அத்தியட்சகர்கள்இ தனியார் வர்த்தக உரிமையாளர்கள் போன்ற அனைவருக்கும் தயவுடன் அறிவிக்கப்படுகின்றது.

  இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் உயர் சட்டமான அரசியலமைப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ள சர்வசன வாக்குரிமை அல்லது வாக்குரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் ஒருவருக்கு வாக்களிக்கச் செல்வதற்குப் போதுமானளவு காலம் விடுமுறையை வழங்காது கட்டாயப் பணியில் ஈடுபடுத்துவதன் மூலம் அத்தொழிலில் ஈடுபடும் நபரின் வாக்குரிமை இழக்கப்படுகின்றது. ஆதலால் வாக்களிக்கச் செல்வதற்காகப் போதுமானளவு காலத்திற்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையைத் தமது பணியாட் குழுவினருக்கு வழங்குமாறு உரிய அனைத்து தொழில் தருநர்களிடமும் தயவுடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது. இவ்வாறு இவ் அறிவித்தலில் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.