4 பிள்ளைகளின் தந்தை தூக்கிட்டு தற்கொலை (படங்கள்)
(எம்.ரீ.எம்.பாரிஸ்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட செம்மண்னோடை, கொமைனி ஹாஜியார் குறுக்கு வீதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை 16.09.2013 இடம் பெற்றுள்ளது.
செம்மண்னோடை கொமைனி ஹாஜியார் குறுக்கு வீதியில் வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான முகம்மது அலியார் இஸ்மாயில் வயது 48 என்பவரே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார். இன்று குறிந்த நபர் தாம் தொழில் புரியும் ஓட்டமாவடியில் உள்ள தனியார் அரிசி ஆலைக்கு தொழில் புரிவதற்காக சென்றதும் அவரது மனைவி தனது மூன்று பிள்ளைகளையும் பாடசாலைக்கு அனுப்பி விட்டு மூத்த மகனுடன் சுகயீனம் காரணமாக வைத்தியசாலைக்குச் சென்று 10.30 மணியளவில் வீட்டிற்கு வந்து பார்த்த போது தனது கணவர் வீட்டு கம்பத்தில் தூக்கிட்டு தொங்கிக் கொண்டிருப்பதனைக் கண்டு கூச்சலிட்டு அழுது புலம்பி அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
இவரது மனைவி இன்னும் சில நாட்களுக்குள் வெளிநாடு செல்ல இருந்ததாகவும், அதனை கணவர் மறுத்து வெளிநாடு செல்ல வேண்டாம் என்று கூறியதன் பிற்பாடு கனவன் மனைவிக்கிடையில் முரண்பாடு நிலவி வந்ததாகவும், அதன் காரணமாக மனஉளச்சலுக்குள்ளாக்கப்பட்டு இவ்வாறு தற்கொலை புரித்திருக்கலாம் என்று அங்கு கூடி நின்ற பிரதேச வாசிகளினால் பேசப்பட்டுவதனை கேட்க முடித்தது.
இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த foto நிக்கி விட்டு
ReplyDeletePlease don@t publish these sort photos and remove this immediately.
ReplyDeleteThank you,
Dr A Iqbal.
Very sad to here. Now his wife can fly without trouble. Lack of understanding about the life and unwanted competition among families to show each other, can end up like this.
ReplyDelete