மாணவி பாலியல் வல்லுறவு - 4 பேருக்கு மரண தண்டனை
நாடு முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட டில்லி மருத்துவ மாணவி பாலியல் வல்லுறவு வழக்கில் இன்று 13-09-2013 மதியம் விரைவு கோர்ட் தீர்ப்பளித்தது. இதன்படி குற்றவாளிகள் 4 பேருக்கும் அதிகபட்ச தண்டனையாக மரணதண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. 4 பேரும் குற்றம் புரிந்தவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே இவர்களுக்கு தூக்குத்தண்டனையை வழங்குவதாகவும் நீதிபதி அறிவித்தார். இன்று அறிவிக்கப்பட்ட தீர்ப்பையொட்டி குற்றவாளிகள் 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இன்றைய தீர்ப்பையொட்டி கோர்ட் வளாகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
அரசியல் ரீதியான தீர்ப்பு :
அரசியல் ரீதியான தீர்ப்பு :
இந்த தீர்ப்பிற்கு பின்னர் கோர்ட் வெளியே நிருபர்களிடம் பேசிய குற்றவாளிகள் வக்கீல் ஏ. பி. சிங் கூறுகையில்: இந்த தீர்ப்பு அரசின் பிரஷர் காரணமாக வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் ரீதியான தீர்ப்பு , மரணத்தண்டனை விதிப்பதால் கற்பழிப்பை கட்டுப்படுத்த முடியாது.
மீடியாவுக்கு நன்றி :
பாலியன் கொடுமைக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி ஆகும். நீதிபதிக்கு நாங்கள் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றோம். போலீசார் தங்களின் கடமைகளை , சாட்சியங்களை சரியாக செய்துள்ளனர். இது மிக அபூர்வமான வழக்கு. எனவே இந்த தீர்ப்பு மிக முக்கியமானதாகும். இது நியாயத்திற்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு பத்திரிகைகள் பங்கும் உண்டு. இதற்கும் நன்றி என அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் கூறினார்.
முன்னதாக கடந்த 7 மாதத்தில் மொத்தம் 117 முறை நீதிபதி அமர்ந்து விசாரணை நடத்தினார். 85 பேர் அரசு தரப்பு சாட்சிகளாகவும், 17 பேர் எதிர் தரப்பு சாட்சிகளாகவும் விசாரிக்கப்பட்டனர். இதில் ராமன்சிங் என்ற குற்றவாளி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். சிறுவனாக கருதப்பட்ட ஒருவருக்கு கடந்த 31ம் தேதி 3 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. ஏனைய முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் ஆகிய 4 பேருக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு நாட்டுக்கு ஒரு முன்மாதிரியாக அமைந்து விட்டது எனவும், இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் பல மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர், மரண தண்டனை விதித்த நீதிபதிக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் மாதம் டில்லி மருத்துவ மாணவியும் அவரது ஆண் நண்பரும் ஒரு பஸ்சில் ஏறினர். இந்த பஸ்ஸில் பெண் மட்டும் தனியாக இருந்ததை பயன்படுத்தி பஸ் டிரைவர் மற்றும் சக நண்பர்கள் மொத்தம் 6 பேர் சேர்ந்து இந்த பெண்ணை கொடூரமாக கற்பழித்து பயங்கர ஆயுதங்களால் தாக்கினர். தொடர்ந்து தடுக்க வந்த மாணவனை தாக்கி பஸ்சில் இருந்து தள்ளி விட்டனர். காலையில் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டு மாணவி உயிருக்கு போராடிய நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இங்கு அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நேரத்தில் மாணவ, மாணவிகள் டில்லியில் வெகுண்டெழுந்தனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உடனே வழங்க வேண்டும் என்றும் போராட்டக்குழுவினர் பிரதமர், ஜனாதிபதி மாளிகை, சோனியா வீடு ஆகியவற்றை முற்றுகையிட்டனர் . நாடு முழுவதும் பல இடங்களில் இந்த போராட்டம் வெடித்தது.
தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி டிசம்பர் மாதம் 21 ம் தேதி மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்தார். மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டும் சிகிச்சை பலன் அளிக்காமல் மாணவி கடந்த டிச. 29 ல் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் டிரைவர் ராமன்சிங், முகேஷ்சிங், வினய்சர்மா, பவன்குப்தா, அட்சய்சிங் , இவர்களுடன் 16 வயது நிரம்பிய மைனர் ஒருவரும் அடங்குவர். அனைவர் கவனத்தையும் ஈர்த்ததால் இந்த வழக்கு வேகமாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதற்கென விரைவு கோர்ட் அமைக்கப்பட்டது . 6 பேரில் ராமன்சிங் என்பவன் திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டான். மைனர் மீதான குற்றம் தனியாக சிறார் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. சிறுவனுக்கு சட்டத்தின்படி அதிகப்பட்ச தண்டனை 3 ஆண்டு சிறை வழங்கப்பட்டது. இன்று குற்றவாளிகள் முகேஷ்சிங், தினேஷ்சர்மா, அட்சய் தாக்கூர், பவன்குப்தா ஆகியோருக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டது.
9 மாதங்கள் : 130 வாய்தா:
இந்த வழக்கு நடந்து முடிய 9 மாதங்கள் ஆகியுள்ளன. விரைவு கோர்ட்டில் 7 மாதம் தொடர்ந்து நடந்த வழக்கில் இது வரை 130 வாய்தாக்கள் தள்ளி போடப்பட்டுள்ளன. கடத்தி கற்பழித்தல், கொலை, கொடூர ஆயுதங்கள் மூலம் தாக்குதல், சாட்சியங்களை மறைத்தல், கிரிமினல் சதி தீட்டுதல், உள்ளிட்ட இந்திய தண்டனை சட்டம் 364 ( கடத்தி கற்பழித்தல்), 302 ( கொலை ) , 307 ( கொலை முயற்சி) , 376 (2) ( கூட்டாக கற்பழித்தல் ) , 365, 394, 395, 397, 120 உள்ளிட்ட 13 பிரிவுகளில் குற்றச்சாட்டுக்கள் போடப்பட்டுள்ளன.
பல நூறு உயிர்களைக் காப்பாற்றும் வைத்தியத்துறையில் உயர்கல்வியைத் தொடர்ந்த இந்த மாணவியை கொடூரமாக வல்லுறவு கொண்டு கொலை செய்த இக்காமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு வரவேற்கக் கூடியதே!
ReplyDelete-புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-