Header Ads



எமக்கு மத்தியில் ஏன் இந்த பிளவு? (பாகம் 4) (படம் இணைப்பு)

'யார் இந்த ஷியாக்கள்? '   

ஆ.ர்.நூருல் ஹசன்

(இந்த கட்டுரையின் தொடர்ச்சியை தொடங்கும் முன் இங்கே ஒரு முக்கியமான விடயத்தை மிகவும் கவலையுடன் தெரிவிக்க நினைக்கிறேன் அதாவது இஸ்லாமிய குடியரசு என தன்னை உலகுக்கு செய்துள்ள இந்த வழி கெட்ட ஷியா ஈரான் குடியரசின் தலைநகரான தெஹ்ரானில் நம்மை போன்ற 'சுன்னி' முஸ்லிம்களுக்கு தொழுகை நடாத்த ஒரு மஸ்ஜித் இல்லை என்பதை  அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் 'கபுறு வணங்கிகளுக்கும்இ ஷியா அபிமானிகளுக்கும் தெரியுமா? மேலும் அங்கே 'சுன்னி' முஸ்லிம்களின் தஹ்வா பணிகளும், அது சம்பந்தமான எல்லா நடவடிக்கைகளும் தடை செய்யப்பட்டுள்ளது)

ஹதீஸ் தொடர்பில் வழிகெட்ட ஷீஆக்களின் நம்பிக்கை:

அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமாஅத்தினர் ஹதீஸ் என நம்புவதை ஷீஆக்கள் ஹதீஸ் என நம்புவதில்லை. தாம் நம்பக்கூடிய தமது இமாம்கள் தொடர்பாக அறிவிக்கப்படும் செய்திகளையே இவர்கள் ஹதீஸ் என்று கூறுகின்றனர். ஆரம்ப காலத்திலிருந்தே ஷீயாக்கள் போலி ஹதீஸ்களை இட்டுக் கட்டுவதில் விற்பன்னர்களாகத் திகழ்ந்தனர். தமக்குத் தேவையானதை ஹதீஸ் என்ற பெயரில் புனைந்து அதற்கு ஸனத் எனும் அறிவிப்பாளர் தொடர்களையும் உண்டாக்கி வைத்துள்ளனர்.

ஸஹாபாக்கள்:

நபித்தோழர்கள் அல்லாஹ்வின் திருப்பொருத்தம் பெற்றவர்கள். இவர்களில் அதிகமானவர்கள் சுவனவாசிகள் என சுபசோபனம் சொல்லப்பட்டுள்ளனர். பைஅதுர் றிழ்வானில் பங்கு கொண்ட 1400 ஸஹாபாக்களும் நரகம் செல்லமாட்டார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஷீயாக்கள் உஷார்

'முஹாஜிர்கள் அன்ஸார்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களுக்கு சுவனம் தயார் பண்ணப்பட்டுள்ளது' என குர்ஆன் கூறுகின்றது. 'பத்ர் ஸஹாபாக்கள் சுவனவாசிகள்' என்றெல்லாம் ஹதீஸ் கூறுகின்றது. ஆனால் ஷீயாக்களோ சுமார் 17 பேர்களைத் தவிர ஏனைய ஸஹாபாக்கள் நரகவாசிகள் என்று கூறுகின்றனர். அபூபக்கர், உமர் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என தொடர்ந்து சபித்து வருகின்றனர்.

அபூபக்கர்(ரழி) அவர்கள் ஷைத்தானின் கொம்பு என்றும் அவரும் அவரது தோழர் உமரும் முனாபிக்குகள், பொய்யர்கள், அநியாயக்காரர்கள். இவர்கள் இருவரின் இமாமத்தை யாரெல்லாம் ஏற்றுக் கொண்டார்களோ அவர்கள் ஜாஹிலிய்யத்தினதும், வழிகேட்டினதும் மரணத்தையே அடைவர் என்றும் கூறுகின்றனர். (அத்தராயிப் பீ மஃரிபதித் தவாயிப் 401)

உமர்(ரழி) அவர்கள் ஸிஹாக் எனும் விபச்சாரிக்குப் பிறந்தவர் என்றும் இதே நூல் கூறுகின்றது.

உஸ்மான்(ரழி) அவர்கள் சபிக்கப்பட்டவர். அசத்தியத்தில் இருந்தார் என 'தீகதுஷ் ஷீயா' என்ற நூல் கூறுகின்றது. ஈரானியப் புரட்சிக்குப் பின்னர் எழுதப்பட்ட 'தும்ம இஹ்ததைத்து' என்ற நூலும், 'அஷ்ஷீஆ ஹும் அஹ்லுஸ்ஸுன்னா' என்ற நூலும் நம்மிடம் நடைமுறையில் உள்ள ஹதீஸ்களைத் தப்பும், தவறுமாக விளக்கி முன்னைய மூன்று குலபாக்களையும் காபிர்கள் எனக் கூறும் விதத்தில் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தனி மனித வழிபாடு:

தனி மனித வழிபாட்டின் மொத்த வடிவமாக ஷீயாயிஷம் உள்ளது. அலி(ரழி) அவர்கள் மீதான வழிபாட்டின் மீதுதான் இந்த மதமே நிறுவப்பட்டுள்ளது. அலி(ரழி) அவர்களையும் தமது இமாம்களையும் எல்லை மீறிப் புகழ்வதுதான் இவர்களின் மதத்தின் சாரமாக உள்ளது. இவர்களில் சிலர் அலி(ரழி) அவர்களை அல்லாஹ்வின் இடத்திற்கே உயர்த்தினர். இவர்களது ஒரு பாடலில்இ 'லாஇலாஹ இல்லஸ் ஸஹாரா' பாத்திமா தவிர வேறு இறைவன் இல்லை என்றும் இடம்பெற்றுள்ளது.

தமது பன்னிரெண்டு இமாம்களும் மறைவானவற்றை அறிந்தவர்கள் என்றும், பாவங்களை விட்டும் பாதுகாக்கப்பட்ட மஃசூம்கள் என்றும் நம்புகின்றனர். தமது இமாம்களுக்கு முர்ஸலான தூதர்களோ, சங்கையான மலக்குகளோ அடைய முடியாத உயர்ந்த அந்தஸ்து உள்ளதாக நம்புகின்றனர்.

கப்று வழிபாடு:

முஸ்லிம் சமூகத்திற்குள் கப்று வழிபாட்டை நுழைத்ததில் இவர்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஹஜ்ஜிற்கு வந்தாலும் இவர்கள் கப்றுகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

ஹுஸைன்(ரழி) அவர்களது கப்ரை ஸியாரத் செய்பவர் அல்லாஹ்வை அர்ஷில் சந்தித்தவர் போலாவார் என்று இன்றுவரையும் பிரச்சாரம் செய்கின்றனர். கப்றுக்குச் செல்லும்போது தவழ்ந்து தவழ்ந்தும் இழுகியும் செல்லும் காட்சிகளை இன்றும் இணையத்தளங்களில் காணலாம்.

கர்பலா பூமி, மக்கா, மதீனா, பலஸ்தீனத்தைவிட இவர்களிடம் புனிதம் பெற்றதாகும். கர்பலா யுத்தம் நடந்த தினத்தை துக்க தினமாக இன்றும் அனுஷ்டிக்கின்றனர். தமது உடல்களில் காயத்தை ஏற்படுத்திக் கொள்கின்றனர். 'யா ஹுஸைன்! யா ஹுஸைன்!' என்று ஒப்பாரி வைக்கின்றனர்.

முத்ஆ திருமணம்:

தான் விரும்பும் பெண்ணை தற்காலிகமாகத் திருமணம் செய்து கொள்ளும் பழக்கம் இவர்களிடம் இருக்கின்றது. இதை ஆதரித்து இவர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். சின்னப் பிள்ளைகளையும் இதற்காகப் பயன்படுத்த முடியும் என்று நம்புகின்றனர். ஒரு முறை உறவு கொள்வதற்காகக் கூட வாடகைப் பெண்களை அமர்த்திக் கொள்ளலாம் என நம்புகின்றனர்.

'முத்ஆ என்பது எனதும் எனது முன்னோர்களினதும் தீனாகும். யார் அதைச் செய்தாரோ அவர் எமது மார்க்கத்தின்படி செயற்பட்டவராவார். யார் அதை மறுத்தாரோ அவர் எமது மார்க்கத்தை மறுத்தவராவார்இவேறு மார்க்கத்தை நம்பியவராவார்' என அவர்களது இமாம் ஒருவர் கூறியதாக 'மன்லா யஹ்லுருஹுல் பகீஹ்' (3:3661) என்ற ஷீயாக்களின் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் முத்ஆ என்பது ஷீஆ மதத்தின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றது. ஷீஆ மத குருக்கள் பெண்கள் மத்தியில் ஒரு முறையேனும் நீங்கள் முத்ஆவில் ஈடுபடுங்கள் என்று போதிக்கும் காட்சிகளை இன்றும் நாம் இணையத்தளங்களில் காணலாம்.

இந்த விபச்சாரத்தின் மீது பெண்களைத் தூண்டும் விதத்தில் ஏராளமான செய்திகளை இட்டுக்கட்டியுள்ளனர்.

நபி(ஸல்) அவர்கள் இஸ்ரா சென்றபோது 'முஹம்மதே உமது உம்மத்தில் உள்ள முத்ஆ திருமணம் செய்யும் பெண்களை நான் மன்னித்து விட்டேன் என அல்லாஹ் கூறுகின்றான்' என ஜிப்ரீல்(அலை) அவர்கள் கூறினார்கள். (மன்லாயஹ்லுருஹுல் பகீஹ்: 2:493) என்று ஹதீஸ்களை இட்டுக்கட்டியுள்ளனர்.

இன்னமும் ஈரான், பஹ்ரைன் ஷீயாக்களிடம் இந்தப் பழக்கம் இருப்பதையும், பாடசாலைச் சிறுமிகளைக் கூட இதற்கு சாதகமாகத் தூண்டுவதையும் இணையத்தளங்களில் காணலாம். ஷீயாக்களை ஆதரிப்பவர்கள் இதையும் ஆதரிப்பார்களா?

தகிய்யா:

பொய் பேசுதல், உள்ளொன்று வைத்து வெளியில் அதற்கு மாற்றமாக வேஷம் போடுதல் என்பது இதன் அர்த்தமாகும்.

இவர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களைக் காபிர் என்று கூறுவர். ஆனால் அலி(ரழி) அவர்கள் அபூபக்கர்(ரழி) அவர்களை மதித்து நடந்துள்ளார்கள். உமர்(ரழி) அவர்களைக் காபிர் என்பார்கள். ஆனால் அலி(ரழி) அவர்கள் தமது மகள் உம்மு குல்தூமை உமர்(ரழி) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள். இந்த முரண்பாட்டை நீக்குவதற்காக இந்தத் 'தகிய்யா' கோட்பாட்டை உருவாக்கினார்கள்.

உள்ளொன்று வைத்து அதற்குப் புறம்பாக நடப்பது மார்க்கக்கடமை. அந்த அடிப்படையில்தான் அலி(ரழி) அவர்கள் நடந்து கொண்டார்கள் என்று கூறுவர். இன்றும் இவர்களது எல்லா வழிகேடுகளையும் இதை வைத்தே பாமர மக்களிடம் மூடி மறைத்து வருகின்றனர்.

தகிய்யா என்ற நயவஞ்சகத்தனம் இல்லாதவனுக்கு தீனே இல்லை என இவர்களது உஸுலுல் காபீ (2:217இ 223) கூறுகின்றது.

இவர்களது ஒரு அறிஞர் அல் இஃதிகாதாத் (114 – 115) என்ற நூலில் 12 ஆம் இமாம் வரும் வரை தகிய்யா (எனும் நயவஞ்சகத்தனம்) வாஜிபாகும். அதனை நீக்கிட முடியாது. 12 ஆம் இமாம் வருவதற்கு முன்னர் யார் அதனை விட்டு விடுகின்றாரோ அவன் அல்லாஹ்வின் மார்க்கத்தையும், இமாமிய்யத் மதத்தையும் விட்டவனாவான். அவன் அல்லாஹ்வுக்கும், இமாம்களுக்கும் மாறு செய்தவனாவான் என்று எழுதியுள்ளனர்.

இவர்களது 12 ஆம் இமாம் வந்து நீதியை நிலைநாட்டுவார் என்றும், அபூபக்கர்(ரழி) உமர்(ரழி) அவர்களை எழுப்பி சிலுவையில் அறைவார் என்றும்இ அவர்களை அறைவதற்கு முன்னர் பச்சை மரமாக இருந்த அந்த (சிலுவை மரம்) இவர்களை அடித்ததும் காய்ந்துவிடும் என்றெல்லாம் நம்புகின்றனர்.

இவ்வாறு இந்த ஷீஆக்களிடம் இல்லாத வழிகேடே இல்லை எனலாம். ஷீயாயிஸம் பரவுகின்ற பகுதிகளில் பரவலாக வன்முறைகள், குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று வருவதையும் காணலாம். இந்த சீரழிந்த சிந்தனைகளை இலங்கையில் பரப்புவதற்குப் பெருத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இன்றைய அரசியல் உலகில் ஈரான் ஒரு ஹீரோவாகப் பார்க்கப்படுவதால் சிலர் ஷீயாயிஸத்தை ஆதரிக்கின்றனர். மற்றும் பலரும் அவர்களது பிரச்சார முயற்சிகளுக்குப் பலியாகி ஷியாயிஸத்தையும் ஒரு மத்ஹபு போன்று,  சாதாரண ஒரு இயக்கம் போன்று பார்க்கின்றனர். இது தவறாகும். ஷீயாயிஸம் என்பது இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான ஒரு தனியான மதமாகும். அவர்கள் நம்பும் குர்ஆன் வேறு, அவர்கள் நம்பும் ஹதீஸ் வேறு. அவர்களது அகீதா கோட்பாடு வேறு, அவர்கள் முன்வைக்கும் ஈமானிய அம்சங்கள் வேறு. எனவே இவர்களது பிரச்சாரம் குறித்து விழிப்பாக இருப்பது அவசியமாகும்.இவர்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுவது அறிஞர்களின் அடிப்படையான கடமையாகும். அல்லாஹ்வால் புகழப்பட்ட ஸஹாபாக்களைத் தூற்றுபவர்களுடன்இ நபியவர்களின் மனைவியர்களான ஆயிஷா(ரழி)இஹப்ஸா(ரழி) ஆகியோரைக் கேவலப்படுத்துபவர்களுடன் நட்புறவுக்கோ அல்லது சமரசத்திற்கோ அறவே இடமில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஷீயாக்கள் குறித்து விழிப்புணர்வுடனும், தெளிவுடனும் இருக்குமாறு இலங்கை வாழ் மக்களைக் கேட்டுக் கொள்கின்றோம்.

' நம்முடைய வசனங்களைப் பொய்ப்பிப்பவர்கள் (குஃப்ரு என்னும்) இருள்களில் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும் இருக்கின்றனர்; அல்லாஹ் தான் நாடியவர்களைத் தவறான வழியில் செல்ல விட்டு விடுகிறான்; இன்னும் அவன் நாடியவரை நேர்வழியில் செலுத்துகின்றான்.' (அல்குர்ஆன் 6:39)

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.(அல்குர்ஆன் 61:8)

இன்னும் பல விபரங்களுடன் இந்த பணி இன்ஷா அல்லாஹ் இனியும் தொடரும்....

1 comment:

  1. மாஷா அல்லாஹ்
    சிறந்த இந்த விளக்கம் நாட்டில் எல்லா பள்ளிகளிலும் அரசியல் வாதிகளிடமும் சொல்வதுகான முயச்சி செய்ய வேண்டும் இல்லை என்றால் பாமர சமூகம் தவறாக வழிநடத பட்டு விடுவர்

    ReplyDelete

Powered by Blogger.