Header Ads



47 ஆண்டுக்கு பிறகு நூலக புத்தகத்தை திருப்பி கொடுத்த பேராசிரியருக்கு 8 லட்சம் அபராதம்

இங்கிலாந்தில் நூலகத்தில் பெற்ற புத்தகத்தை 47 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி கொடுத்த பேராசிரியருக்கு இந்திய ரூ.8.4 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இங்கிலாந்தின் பெல்பாஸ்ட் இன்ஸ்டிடியூட்டில் குயின்ஸ் பல்கலைக் கழகத்தில் ஐரிஷ் மொழி பயிற்றுவிக்கும் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஜான் ஜேக் பாஸ்டர். அதற்கு முன்னர் ஜான் ஜேக் பாஸ்டர், வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்தார். அந்த பல்கலையில் ஜானுக்கு லாக்கர் ஒதுக்கப்பட்டிருந்தது. ஓய்வு பெற்றதை அடுத்து 2 நாட்களுக்கு முன்னர் லாக்கரை காலி செய்தார்.

அப்போது, பிரபல கவிஞர் ஆர்தர் கிளாக் எழுதிய கவிதை நூல் லாக்கரில் இருப்பதை கண்டார். அந்த புத்தகம் நூலகத்தில் இருந்து பெறப்பட்டிருந்தது. அதில், திருப்பி கொடுக்க வேண்டிய தேதி 1966 அக்டோபர் 11 என குறிப்பிடப்பட்டிருந்தது. அதே பகுதியில் உள்ள மெக் கிளாய் நூலகத்தில், அந்த புத்தகம் எடுக்கப்பட்டிருந்தது. அதை திரும்ப ஒப்படைக்க சென்றார் ஜான். அப்போது, புத்தகத்தை தாமதமாக திருப்பி கொடுத்ததற்கு அபராதம் ரூ.8.4 லட்சம் கட்ட வேண்டும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.

அதிர்ச்சி அடைந்த ஜான், புத்தகத்தை பத்திரமாக திருப்பி கொடுத்து விட்டதால் அபராதத்தை தள்ளுபடி செய்யும்படி மனு செய்தார். அதை ஏற்று நூலக நிர்வாகம் அபராதத்தை தள்ளுபடி செய்தது.

No comments

Powered by Blogger.