Header Ads



ஈரானில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்தது - 44 பேர் மரணம்


ஈரானில் இஸ்பஹான் என்னுமிடத்தில் இருந்து புறப்பட்ட பேருந்து ஒன்று நேற்று இரவு ஈரான் - கோம் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தின் டயர் ஒன்று வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் முன்னே சென்றுகொண்டிருந்த காரின் மீது மோதியது. பின்னர் எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது வேகமாக மோதியது.

உடனே இரு பேருந்துகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. இதனால், மக்கள் செய்வதறியாது திகைத்து தப்பிக்க முயற்சிப்பதற்குள் தீ மளமளவென பேருந்து முழுவதும் பரவியது. இதில் பயணிகள் 44 பேர் பலியாயினர். 39 பேர் படுகாயமடைந்தனர்.

ஈரானில் சாலைகள் சரியாக பராமரிக்கப்படாமல் கடந்த சில வருடங்களாகவே வாகன விபத்துகள் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. 90-களில் நடந்த வாகன விபத்துகளில் அங்கு வருடத்திற்கு 28 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இன்று அங்கு 1 கோடியே 70 லட்சம் வாகனங்கள் உள்ள நிலையிலும் சற்று குறைந்து, வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் விபத்துகளில் இறப்பதாக கூறப்படுகிறது. 

No comments

Powered by Blogger.