நாட்டின் பிறக்காத குழந்தை கூட 431000 ரூபா கடனாளி
பிறக்கும் குழந்தைகளையும் இந்த அரசாங்கம் கடனாளியாக்கியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்னதாக மக்கள் முன்னணி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட போது நாட்டின் மொத்தக் கடன் 750 பில்லியன் ரூபா எனவும், தற்போது இந்தத் தொகை 7500 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாகவும் கட்சியின் தேசிய அமைப்பாளர் தயா கமகே தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளின் கூட்டமையினால் நடத்தப்பட்ட ஊடகவியலளார் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பிறக்காத குழந்தைகள் கூட 431000 ரூபா கடனாளியாகியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த அரசாங்கத்திடம் எந்தவிதமான பொருளாதாரக் கொள்கைகளும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக் கூடிய ஆற்றல் இந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு கிடையாது என தயா கமகே தெரிவித்துள்ளார். gtn
Post a Comment