ஹிட்லரின் மோதிரம் இந்திய ரூ 42 லட்சத்துக்கு ஏலம்
ஜெர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர், 2ம் உலகப் போரின் போது உலகையே ஆட்டி படைத்தவராக இருந்தார். அவர் பயன்படுத்திய மோதிரம் ஒன்று அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலத்துக்கு வந்தது. இதுகுறித்து அதன் துணை தலைவர் ஆண்ட்ரஸ் கோர்ன்பெல்டு கூறியதாவது:
இந்த மோதிரம் மிகவும் திறமை வாய்ந்த பொற்கொல்லர்களால் செய்யப்பட்டுள்ளது. நாஜிக்கள் முத்திரை (ஸ்வஸ்திக் சின்னம்) பதிக்கப்பட்ட இந்த மோதிரம் ஜெர்மானியர்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றதாக விளங்கியது. சிறந்த கைவினை வேலைப்பாடுகளுடன் தங்கத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மோதிரத்தில் பவளம் பதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோதிரத்தை ஹிட்லர் அணிந்திருந்ததற்கான புகைப்படங்கள் எதையும் இன்னும் நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இது ஹிட்லரின் சேகரிப்பில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மோதிரத்தை அவருக்கு யாராவது பரிசாக கொடுத்திருக்கலாம் அல்லது அவர் யாருக்காவது பரிசாக கொடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
மிகச்சிறந்த முறையில் ஆன்லைனில் ஏலம் நடந்தது. பழைய வரலாற்று பொருட்களை சேகரிக்கும் ஒருவர் இந்திய ரூ.42 லட்சத்துக்கு ஏலம் எடுத்துள்ளார். இந்த மோதிரத்தை முதன் முதலாக அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் 2ம் உலகப் போரின் போது 1945ம் ஆண்டு ஜெர்மனியில் உள்ள பவாரியாவில் கண்டுபிடித்தார். அதன்பிறகு பல்வேறு நாடுகளை சேர்ந்த பழைய பொருட்கள் சேகரிப்பாளர்களிடம் சென்று தற்போது எங்கள் மூலமாக ஏலத்துக்கு வந்தது.இவ்வாறு ஆண்ட்ரஸ் கூறியுள்ளார்.

Post a Comment