மாகாண சபைகளுக்கான தேர்தல் கடமைகளில் 40 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள்
(எம்.எம்.ஏ.ஸமட்)
எதிர்வரும் செம்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு, வட மேற்கு மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கான தேர்தல் கடமைகளில் 40 ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தேர்தல் திணைக்களம் குறிப்பிடுகிறது.
தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்கள் பல்வேறு அரச நிறுவனங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தெரிவு அத்தாட்சி உத்தியோகத்தர்கள், உதவி தெரிவு அத்தாட்சி உத்தியோகத்தர்கள். பிரதம வாக்குக் கணிப்பீட்டாளர்கள், கணிப்பீட்டாளர்கள். மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள் என பல்வேறு பதவிகளில் இவர்கள் நியமிக்கப்படவர் எனத் திணைகளம் குறிப்படுகிறது.
இதேவேளை, தபால் மூலம் வாக்களிப்பதற்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. நடைபெறவுள்ள வடக்கு வடமேற்கு மற்றும் மத்திய மாகாண சபைக்கான தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்காக 1 இலடச்து 33 ஆயிரத்து 542 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் அவற்றில் 22ஆயிரத்து 159 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 1 இலட்சத்து 11ஆயிரத்து 383 தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரிகளுக்கான வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக தேர்தல் திணைக்களத்தின் பிரதித் தேர்தல் ஆணையாளர் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூலம் வாக்களிப்போருக்கான வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் விஷேட நாளான எதிர்வரும் செம்டம்பர் மாதம் 8ஆம் திகதி வாக்களார் அட்டைகள் விநியோகிக்கப்படவுள்தாகவும் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள 3 மாகாணங்களையும் சேர்ந்த தபால் மூலம் வாக்களிப்பதற்கு தகைமைபெற்றுள்ள அரச ஊழியர்கள், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படை உத்தியோகத்தர்கள் எதிர் வரும் செப்டம்பர் 10ஆம் மற்றும் 11ஆம் திகதிகளில் நடைபெறும் 3 மாகாணங்களுக்கான தபால் மூல வாக்களிப்புத் தினத்தில் வாக்களிப்பர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment