வாக்களிப்பதற்கு 4 மணித்தியால குறையாத சம்பள இழப்பை ஏற்படுத்தாத லீவு வழங்கவேண்டும்
மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைகளுக்காக எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை தொழிலாளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக ஆகக் குறைந்தது நான்கு மணித்தியாலங்களுக்கு குறையாத சம்பள இழப்பை ஏற்படுத்தாத லீவு வழங்கப்படல் வேண்டும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தொழில்தருநர்களிடம் கேட்டுள்ளார்.
தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவர் தனது வாக்கை அளிப்பதற்காக விடுமுறை அளிப்பது தொடர்பான 1988 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தின் 123 ஆம் பிரிவின் பிரமாணங்களில் குறிப்பிட்டுள்ள ஏற்பாடுகளை தேர்தல்கள் ஆணையாளர் இதற்கெனச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இப்பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய தனது வாக்கையளிப்பதற்காக விடுமுறை கோரி எழுத்து மூலம் விண்ணப்பம் செய்கின்ற எல்லா ஊழியர்களுக்கும் விடுமுறை வழங்கப்படல் வேண்டும். அவ்வாறு வழங்கப்படும் விடுமுறைக் காலம் அமைய ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விசேட விடுமுறை ஒன்றாக கருதப்பட வேண்டியதுடன் அது ஊழியர்களின் சாதாரண லீவுகளிலிருந்து புறம்பானதாக இருக்க வேண்டும்.
இவ்விடயம் தொடர்பாக ஊழியர்களுக்கு வழங்கப்படும் விடுமுறை காலத்தை, அந்த ஊழியர் தொழில் புரியும் இடத்திலிருந்து அவரது வாக்கெடுப்பு நிலையத்திற்குப் போகவும் அங்கிருந்து திரும்பி வரவும் உள்ள தூரத்தைக் கருத்தில் கொண்டு தொழில் தருநரால் தீர்மானம் செய்யப்படல் வேண்டும். சட்டத்தின் கீழ் உரிமையுள்ள இவ்விடுமுறையை தனியார் மற்றும்,அரசாங்கத்துறையில் உள்ள தொழில்தருநர்கள் தமது தாபனத்தில் தொழில்புரியும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தொழில்தநர்களைக் கேட்டுள்ளார்.
Post a Comment