Header Ads



எமக்கு மத்தியில் ஏன் இந்த பிளவு..? (பாகம் 3) "யார் இந்த ஷியாக்கள்..??

(M.H.நூருல் ஹசன்)

இதற்கு முன் எழுதிய  இதே தொடரில் முஸ்லிம்களின் மத்தியில் பிளவு ஏற்பட முக்கிய இரண்டு காரணிகளை அதாவது நமக்குள் தோற்றியுள்ள இஸ்லாமிய இயக்கங்கள் / யூத சியோனிச எதிரிகளின் சூழ்ச்சிகள் போன்றவற்றை அல்லாஹ்வின் அருளால் என்னால் முடிந்த அளவு தெரிவித்தேன், இனி நம் மத்தியில் இஸ்லாமிய போர்வையை போர்த்திக்கொண்டு  முழு உலகிலும் நமது நாட்டிலும் தமது வழி கெட்ட கொள்கைகளினால் அல்லாஹ்வுக்கு இணைவைக்கக்கூடிய / அல்லாஹ்வின் ரஸூலின் வழியை மறந்த / கலீபா அபூபக்கர் (ரலி) , உமர் (ரலி)  போன்றோரை நயவஞ்சகர்கள்    ரசூல் (ஸல்) அவர்களின் அன்பு மனைவிகளான ஆயிஷா (ரலி) / ஹப்ஸா (ரலி) போன்றோரின் கற்பையே சந்தேகிக்க கூடிய அன்பின் சஹாபாக்களை சபிக்கக்கூடிய "ஷியாக்களை" பற்றி கொஞ்சம் இங்கே கவனம் செலுத்துவோம்.

 (சிலருக்கு இந்த உண்மை கசக்கும் ஆனால் உண்மையை கொண்டு உபதேசம் செய்வது முஸ்லிமான ஒவ்வொருவரின் மீதும் கடமை) யூதன் ஒருவனால் உருவாக்கப்பட்ட இந்த ஷியா கொள்கையை இலங்கையில் பணத்திற்கு விலைபோன ஷியா முகவர்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள முக்கிய பணிகளாவன, ஈரானை புகழ்வது, இஸ்ரவேலை ஈரான் தாக்கப் போகின்றது என்று பரபரப்பை ஏற்படுத்துவது, ஒற்றுமை, இஸ்லாமிய ஆட்சி, கிலாபத் என்று பேசுவது, நமது கலீபாக்களையும் / சஹாபாக்களையும்/ ரசூலுல்லாஹ்வின் மனைவிகளையும் (ஆயிஷா (ரலி) அவர்களை வேசி என்றும்) திட்டித் தீர்த்து அல்லாஹ்வின் கோபத்துகுள்ளன நயவஞ்சக “கொமெய்னி”யை புகழ்வது பழைய (விடயங்களை கிலாகித்து பேசுவது, அரபிகளை, குறிப்பாக சவுதியை சதா ஏசிக்கொண்டே இருப்பது போன்றவை ஆகும்.

இவற்றில் அதிகம் மாட்டுப்பட்டு இருப்பவர்கள் முஸ்லிம் பெயர்தாங்கி ஊடகவியலாளர்கள் , அரசியல்வாதிகள், ஒரு சில மார்க்க அறிஞர்கள் ஆகும். தேடித் பார்த்தால் இன்னும் பல துரோகிகளை இனம் காணலாம். இலங்கையில் ஈரானுக்கு தனி மதிப்பு நமது அரசாங்கத்திடமும் உள்ளது. ஆம் நம் நாட்டில் (ஈரான் தூதரகத்தின் அனைத்து விதமான உதவிகளுடன் இதில் பொருளாதார உதவியும் பெருமளவில் அடங்கும்)  ஈரான் என்றால் ஒரு முஸ்லிம் நாடு என்கிற மாயையை அப்பாவி முஸ்லிம்களின் மத்தியில் உருவாக்கி , ஈரான் மட்டுமே உண்மையான இஸ்லாமிய நாடு , அவர்களே முஸ்லிம்களை வழி நடத்த தகுதியானவர்கள், ஷியாக்களின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்றும் பறை சாற்றுபவர்கள் என்றெல்லாம் புரளியை கிளப்பி நமக்குள் பிளவை ஏற்படுத்துகிறார்கள்.(இதற்கான முழு ஆதாரங்களும்  அல்லாஹ்வின் கிருபையால் நம்மிடம் உண்டு)

சவூதி அரேபியா அல்ல  ஏனைய  முஸ்லிம் நாடுகள் ஆகட்டும் 100 சதவீத இஸ்லாமிய ஆட்சி நிலவும் நிலப்பரப்பு எங்கும் இல்லை.அது மஹ்தியின் வருகைக்குப் பின் தான் சாத்தியம். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களின் பன்னிரெண்டு இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும், பன்னிரெண்டு இமாம்களும், மலக்குகளும், நபிமார்களும் அடைய முடியாத விஷேச நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர்.இது அவர்களின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.(இந்த வழி கெட்ட கூட்டத்தினரின் கிதாபு - விலாயதே பகீஹ் தர் குஸுஸே ஹுகூமதே. இஸ்லாமி, தஹ்ரான் வெளியீடு பக்கம் 58)

ஷியாக்களின் இஸ்லாத்துக்கு எதிரான சதிகள், அவர்களின் நயவஞ்சகம், பிரச்சார உத்திகள், கேடு கேட்ட கொள்கைகள், இலங்கையில் ஷீயாக்களின் ஊடுருவல், ஆதிக்கம் என்பவற்றை அரியாத "கபுறு வணங்கிகள்" இவர்களை தமது தலைக்கு மேல் வைத்து ஆடுகின்றனர். (யா அல்லாஹ் எம் அனைவரையும் நேரான வழியில் நடத்திடுவாயாக) இந்த நயவஞ்சக ஷியாக்களின் சூழ்ச்சியினால் தற்போது பஹ்ரைன்,குவைத், சவூதி அரேபியா, ஈராக், பாகிஸ்தான், சிரியா போன்று பல  நாடுகளில் பாரிய பிரச்சினை தோன்றியுள்ளது. இனி "யார் இந்த ஷியாக்கள்" என்பதை நோக்குவோம்.

"யார் இந்த ஷியாக்கள்? "

அப்துல்லாஹ் பின் ஸபா (இவனது பூர்வீகம் யேமன்) எனும் யூதனால் தோற்றுவிக்கப்பட்ட ஒரு அமைப்பே ஷீயாயிஷமாகும். ஆரம்பத்தில் அரசியல் ரீதியில் சிந்தித்த இவர்கள், பின்னர் தமது அரசியல் சிந்தனைகளுக்கெல்லாம் மதச்சாயம் பூசச் சென்றதால் இஸ்லாத்தை விட்டும் விலகிச் சென்றுவிட்டனர்.

 ‘நபியவர்களுக்குப் பின்னர், அலி(ரழி) அவர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும் என அல்லாஹ் குர்ஆனிலும் கூறியிருக்கின்றான். இவர்கள் அந்த ஆயத்துக்களை நீக்கிவிட்டனர். அபூபக்கர்(ரழி), உமர்(ரழி), உஸ்மான்(ரழி) ஆகிய மூவரும் அலி(ரழி) அவர்களுக்குத் துரோகம் செய்துவிட்டனர். அதற்கு ஏனைய ஸஹாபாக்கள் அனைவரும் உடந்தையாக இருந்தனர். எனவே, நபித்தோழர்கள் அனைவரும் காபிராகி விட்டனர்’ என்று அவர்கள் கூறினார்.
இவ்வாறு இஸ்லாத்தில் இல்லாத இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய பல கருத்துக்களைக் கொண்டவர்கள்தான் ஷீயாக்களாவர். எல்லா வகையான வழிகேடுகளும் இந்த ஷீயாக்களிடம் குடிகொண்டுள்ளன.

குர்ஆன் மாற்றப்பட்டு விட்டதாக நம்புகின்றனர்:

நபித்தோழர்கள் குர்ஆனை மாற்றிவிட்டனர் என்பது ஷீயாக்களின் நம்பிக்கையாகும். நம்மிடம் ஸஹீஹுல் புஹாரி பெற்றிருக்கும் அந்தஸ்தை அவர்களிடம் ‘அல்காபீ’ எனும் நூல் பெற்றுள்ளது. இந்த நூலில், ‘நபி(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்ட ஆயத்துக்களின் எண்ணிக்கை பதினேழாயிரமாகும். எனக் கூறுகின்றனர்.

உண்மையான முழுக்குர்ஆனும் தமது இமாம்களிடம் இருப்பதாகவும் நம்புகின்றனர். தம்மிடம் முஸ்ஹபு பாத்திமா உள்ளது. அல்லாஹ்வின் மீது சத்தியமாக உங்களின் குர்ஆனில் இருக்கக்கூடிய ஒரு எழுத்துக்கூட அதில் இல்லை என அவர்களின் முக்கிய இமாம் ஜஃபர் ஸாதிக்(ரழி) கூறியதாகப் பதியப்பட்டுள்ளது.

குர்ஆனில் மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை விளக்கி ‘பஸ்லுல் கிதாப் பி இஸ்பாதி தஹ்ரீபி ரப்பில் அர்பாப்’ என்ற பெயரில் நூரி அத்தப்ரிஸீ என்பவர் தனி நூலையே எழுதியுள்ளார். ஷீயாக்களின் இஸ்னா அக்ஷரிய்யா பிரிவினரிடம் குர்ஆன் மாற்றப்பட்டு விட்டது என்ற கொள்கை பரவலாக உள்ளது.  

(இன்ஷா அல்லாஹ் தொடரும்..........,)

1 comment:

  1. மாஷா அல்லாஹ் நல்ல தொடா் தொடருங்கள் அல்லாஹ் உங்களுக்கு கிருபை செய்வான்

    ReplyDelete

Powered by Blogger.