Header Ads



பள்ளிவாசலில் பணம் திருடிய 3 சிறுவர்கள் - பொறுப்பேற்க பெற்றோர்கள் மறுப்பு

(tm) பள்ளிவாசல் உண்டியலை உடைத்து பணம் திருடியதாக கூறப்படும் மூன்று சிறுவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம், தில்லையடி பிரதேசத்திலுள்ள ஜூம்ஆ பள்ளிவாசயலில் நேற்று சனிக்கிழமை உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று சிறுவர்கள் புத்தளம் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

15 வயதுக்கு உட்பட்ட இந்த மூன்று சிறுவர்களும் நேற்று இரவு தில்லையடி பள்ளிவாயசலில் புகுந்து அங்கிருந்த உண்டிலை உடைத்து பணம் திருடிய வேளை ஊர் மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் அவர்களின் பெற்றோர்களுக்கு அதுபற்றி தெரிவிக்கப்பட்டது. எனினும் குறித்த மூன்று சிறுவர்களின் பெற்றோர்களும் தமது பிள்ளைகளை பொறுப்பேற்க மறுத்ததினால் அவர்கள் புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரிடம் ஒப்படைக்கப்ப்பட்ட மூன்று சிறுவர்களிடமும்  2,500 ரூபா பணம் கையில் இருந்ததாக குறித்த ஜூம்ஆப் பள்ளி நிருவாக சபை உறுப்பினர் ஒருவர் கூறினார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

2 comments:

  1. 2500/= களவெடுத்ததட்காக போலீசில் பிடித்துக்கொடுத்துள்ளர்கள், பள்ளிவாசல்களின் பெயரால் கொள்ளையடிக்கும் பள்ளிவாசல்களின் நிருவாக சபையை என்ன செய்யலாம் ?????????? சொல்லுங்களேன் ,

    ReplyDelete
  2. குழந்தை வளர்ப்பு பற்றி அறிந்திராத அப்பாவி பெற்றோர்கள் இவர்கள். தண்டனை சிறுவர்களுக்கா அல்லது இப்படி வளர்த்த சிறுவர்களின் பெற்றோருக்கா என யோசிக்க வேண்டியுள்ளது. இஸ்லாமிய அறிவு பண்பாடு அதன் தாற்பெரியங்கள் அறியப்படாத பெற்றோர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.