உயர்தரப்பரீட்சை 3ஆம் கட்ட மதிப்பீடு பிற்போடப்பட்டுள்ளது
2013 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான மூன்றாம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் இம்மாதம் 25ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
எனினும் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஒக்டோபர் மாதம் எட்டாம் திகதி நிறைவுபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார ஏற்கனவே கூறியிருந்தார்.
இருப்பினும் மாகாண சபைத் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ளதால் மூன்றாம் கட்ட விடைத்தாள் மதிப்பீடு பணிகளை ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த தினத்தில் ஆரம்பிக்க முடியாமற்போயுள்ளது.
அதன்படி இம்முறை உயர்தரப் பரீட்சையின் முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் கடந்த மாதம் 27 ஆம் திகதியுடன் நிறைவுபெற்றது.
தொடர்ந்தும் கடந்த மூன்றாம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நேற்று முன்தினத்துடன் நிறைவுபெற்றுள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
-

Post a Comment