Header Ads



கைவிடப்பட்ட குளிர்சாதனப்பெட்டியினுள் ஒளிந்துவிளையாடிய 3 சிறுவர்கள் மரணம்

ஆப்பிரிக்க நாடான தென் ஆப்பிரிக்காவின் வட மேற்கு மாகாண அடமேலாங் நகரில் 3 சிறுவர்கள் கைவிடப்பட்ட நிலையில் கேட்பாரற்று கிடந்த குளிர்சாதனப்பெட்டியில் ஒளிந்து விளையாடிக்கொண்டிருந்தனர். 4 வயதான இருவர், 3 வயது ஒருவர் என விவரம் தெரியாத அந்த சிறுவர்கள் உள்ளே ஒளிந்திருந்தபோது அந்த குளிர்சாதனப்பெட்டி மூடிக்கொண்டது.

பின்னர் அந்த மூன்று சிறுவர்களாலும் அப்பெட்டியிலிருந்து வெளியே வரமுடியாமல் மூச்சுத்திணறி உள்ளேய இறந்து கிடந்தனர். இந்நிலையில் அந்த சிறுவர்களை காணாது பெற்றோர்கள் தேடி அலைந்தனர். இறுதியில் சிறுவர்களின் உறவினரான ஒரு மூதாட்டி அந்த பெட்டியை திறந்து பார்த்தபோது அவர்கள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சிறுவர்களின் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பாவி சிறுவர்கள் இறந்துபோனது அப்பகுதியில் மிகுந்த சோகத்தை வரவழைத்துள்ளது.

No comments

Powered by Blogger.